அடுத்த 100 ஆண்டுகளுக்கு திட்டமிட்ட வளர்ச்சி! அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அடுத்த நூறு ஆண்டுகளின் தேவைகளை மனதில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடப்பட வேண்டும் என்றும், இதற்காக மாநிலத் தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (எஸ்சிஆர்டிஏ) விரைவில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதன்படி மாநிலத் தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம் (எஸ்சிஆர்டிஏ) விரைவில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் உத்தரப் பிரதேசத்தின் அடுத்த நூறு ஆண்டுகளின் தேவைகளை மனதில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை திட்டமிடும் என்று கூறப்படுகிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையின் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை தனது இல்லத்தில் நேற்று யோகி ஆதித்யநாத் நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம், எஸ்சிஆர்டிஏவின் செயல் திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதில், லக்னோ, உன்னாவ் , ஹர்தோய் , ரேபரேலி , சீதாப்பூர் மற்றும் பாரபங்கி மாவட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலத் தலைநகர் லக்னோவை எஸ்சிஆர்டிஏவின் தலைமையகமாக மாற்றவும், குடிமக்களின் வசதிக்காக பிற மாவட்டங்களில் பிராந்திய அலுவலகங்களைத் திறக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற வளர்ச்சி வேகமெடுக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications