காற்று மாசுக்கு 'பை பை' சொல்லும் உத்தரப் பிரதேசம்! முக்கிய திட்டத்தை அறிவித்தார் யோகி அதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசம் விரைவில் காற்று மாசு இல்லாத மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் உ.பியில் காற்று மாசை குறைக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். அதாவது மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்க இந்த திட்டம் வழிவகுக்கிறது. அதேபோல மாநில சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு காரணமாக படிம எரிபொருளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே 'பசுமை ஹைட்ரஜன்' உற்பத்தி மையத்தை அம்மாநில அரசு அமைக்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.16,000 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி யைம் உத்தரப் பிரதேசத்தில் உருவாகி வருகிறது. இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் படி எரிபொருளான பெட்ரோல், டீசல் போன்றவைக்கு பதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால் காற்று மாசு குறைந்து உலகம் வெப்பமயமாதல் தடுக்கப்படும்.
எனவே பசுமை ஹைட்ரஜனில் மாநில அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை-2023க்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தில், பல ஆறுகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி, நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியாளராக உ.பியை மாற்றலாம். எனவே மத்திய அரசின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்தை கூர்ந்து கவனித்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications