பெரும் வளர்ச்சியை நோக்கி உ.பி பால்வளத்துறை! அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் வளரும் என யோகி நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில ஆண்டுகளில் பால்வளத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பால்வளத்துறை குறித்து பேசிய அவர், "அடுத்த சில ஆண்டுகளில் இத்துறை பெரிய அளவில் வளர்ச்சியை எட்டும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநில அரசு பால்வளத்துறையை மேம்படுத்த ரூ.31 கோடியை ஒதுக்க இருக்கிறது. ஏற்கெனவே கால்நடை இனங்களை மேம்படுத்துதல், பால் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு மாட்டு இனங்களின் மக்கள்தொகையை அதிகரிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பணியை மாநில அரசு செய்து வருகிறது. இப்படி இருக்கையில், 'நந்த் பாபா' பால் இயக்கத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களுக்கான விரிவான செயல் திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதன்படி 'முதலமைச்சர் சுதேசி பசு ஊக்குவிப்புத் திட்டம்' மற்றும் 'முதலமைச்சர் முற்போக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம்' ஆகிய இரண்டிற்கும் கணிசமான ரூபாய் 10 கோடியும், 'நந்தினி கிரிஷக் சம்ரிதி யோஜனாவிற்கு' 11 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, யோகி அரசாங்கம் 2,500 உள்நாட்டு பசு மையங்களை நிறுவவும், கால்நடை துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 8,000 விருதுகளை விநியோகிக்கவும், 35 பால்பண்ணைகளை அமைக்கவும் உத்தேசித்துள்ளது. பால்வளத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றியை தரும் என்றும், அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறை பெரிய அளவில் வளரும் எனவும் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications