உத்தரப் பிரதேசத்தில் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பொருளாதாரத்தை அதிகரிக்க இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலன் அளித்துள்ளன என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

தேசிய அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தாலும் கூட, பொருளாதாரத்தில் அம்மாநிலம் போதிய உயரத்தை எட்டவில்லை. எனவே மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த முயற்சிகள் எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளன என்பது குறித்து யோகி ஆதித்யநாத் ரிவியூ மீட்டிங் நடத்தி வருகிறார். இதில் பேசிய அவர்,

Yogi Adityanath is proud that all the decisions taken to develop the economy of Uttar Pradesh have yielded good results

"நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. உத்தரப் பிரதேசம் டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக வேகமாக முன்னேறி வருகிறது. அரசாங்கத்தின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பலனைத் தரத் தொடங்கியுள்ளன. அது தனியார் முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் சரி அல்லது மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் இருந்து மீட்பதாக இருந்தாலும் சரி. நம்முடைய முயற்சிகள் வெற்றியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக COVID-19 தொற்றுநோயால் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சவால்களை எதிர்கொண்ட போதிலும், உத்தரப் பிரதேசம் அதன் வளர்ச்சிப் பாதையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை. 2020-21 நிதியாண்டில் ரூ.16,45,317 கோடியாக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 2021-22ல் 20 சதவீதம் அதிகரித்து ரூ.19,74,532 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2022-23ம் ஆண்டு இது ரூ.21.91 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022-23 ஆம் ஆண்டில் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட மொத்த நிதியில் 16.2 சதவீதத்தைக் கொண்டு உத்தரப் பிரதேசம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நமது மாநிலம் முன்னேற்ற பாதையில் இருக்கிறது என்பதை இதன் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+