யாரு சொன்னது.. என்கவுன்ட்டர்கள் உ.பி.யில் அதிகமா? சட்டம் ஒழுங்கில் கறாராக இருக்கோம்: யோகி அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் இருவர் என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குண்டர்களை ஒழிக்கதான் என்கவுன்ட்டர் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரபல தாதாவாக வலம் வந்த அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது அம்மாநில காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அதாவது அத்திக் அகமது உ.பியின் பிரபலமான ரவுடியாவார். இவர் 4 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார். இப்படி பதவி வகித்த காலத்தில்தான் அத்திக்கின் செல்வாக்கு வளர்ந்திருக்கிறது. எல்லாவிதமான சட்டவிரோத செயல்களையும் அத்திக் செய்து வந்திருக்கிறார். இதனால் இவருக்கு கோடி கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.

அதேபோல மறுபுறம் வழக்குகளும் சேர்ந்திருக்கின்றன. அதாவது 101 வழக்குகள் அத்திக் மீது பதியப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவரையும் இவருடைய சகோதரரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவருடைய மகன்தான் ஆசாத் அகமது. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரை காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும்போது அவர் ஜான்சி வழியாக உத்தரப் பிரதேசத்தைவிட்டு தப்பி செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் 12 பேர் கொண்ட ஸ்பெஷல் போலீஸ் குழுக்கள் இவர்களை கைது செய்ய நியமிக்கப்பட்டனர். எதிர்பார்த்தபடி ஆசாத் ஜான்சியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜான்சியில் அவரையும் அவரது குழுவையும் சுற்றி வளைத்த போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த அவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரும் அவரது நண்பர் ஒருவர் என இருவர் சம்பவ இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த என்கவுன்ட்டர் மூலம் யோகி ஆதித்யநாத் உ.பி முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து செய்யப்பட்ட என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது. இதைத்தான் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள யோகி ஆதித்யநாத், "என்கவுன்ட்டர்கள் குண்டர்களை அடக்கதான் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கோசி காலன் எனும் ஊருக்கு சென்றிருந்தேன். அது மிகப்பெரிய முஸ்லீம் வாழும் பகுதி.
ஆனால் அங்குதான் மாநிலத்தின் மிகப்பெரிய கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் ஆகியோர் இருந்தனர். அப்போது எனக்குள் தோன்றிய ஒரே கேள்வி, 'அரசு ஏன் இதுபோன்ற குற்றவாளிகளை வளர்த்துவிடுகிறது?' என்பதுதான். கோசி காலன் மிகவும் மோசமாக இருந்தது. சுகாதாரம், குடிநீர் வசதி, கல்வி என எதுவும் அங்கு சரியானதாக இல்லை. இப்படி இருக்கையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரபல ரவுடி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். மீண்டும் நான் அதே ஊருக்கு சென்றிருந்தேன்.

இந்த முறை மக்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். அதேபோல அவர்களுக்கு இருக்கும் சுகாதார பிரச்னைகள் குறித்து கவலைப்படவில்லை. ஏனெனில் இந்த அரசு முதலில் ரவுடிகளை ஒழித்துக்கொண்டிருக்கிறது. எனவே பின் வரும் நாட்களில் இந்த சுகாதார சீர் கேடுகளும் ஒழித்து கட்டப்படும் என்று மக்கள் என் காதுபட பேசிக்கொண்டிருந்தனர். எனவேதான் இந்த அரசு என்கவுன்ட்டர்களை தீவிரப்படுத்தியது" என்று கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications