பிரதமர் மோடி நாட்டில் செழிப்பை ஏற்படுத்துகிறார்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் செழிப்பை ஏற்படுத்தும் நபராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் யாத்திரையை உ.பி மாநில பாஜக மேற்கொண்டிருக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ஏராளமான நிதியை உ.பிக்கு வழங்கியிருக்கிறது. எனவே பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உ.பி அரசு விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நடைபெற்று வரும் யாத்திரையில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத், "நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் செழிப்பை ஏற்படுத்தும் நபராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Yogi Adityanath is proud that PM Modi is the creator of prosperity among the people of the country

தொடர்ந்து பேசிய அவர், "வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம், இலவச கழிவறை திட்டம், இலவச கேஸ் சிலிண்டர், ரேஷசன் அட்டை, கிசான் சம்மன் நிதி, ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் என பல திட்டங்கள் மக்களுக்கு இன்னும் விரிவாக சென்று சேர வேண்டும். எனவே மாநிலம் முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரசார யாத்திரை நடைபெற்று வருகிறது. மக்கள் யாருக்கேனும் இத்திட்டத்தின் பலன்கள் சென்று சேரவில்லையெனில் உடனடியாக அவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். உத்தரப் பிரதேசத்தில் எப்படி மக்கள் நலத்திட்டங்கள் சீராக அமல்படுத்தப்படுகிறதோ, அதேபோல நாடு முழுவதும் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் திட்டங்கள் பிரமாதமான முறையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தகுதியுள்ள மக்களை எளிதில் மற்றும் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+