உ.பி இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீது இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஏழை எளிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவச சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வகுப்புகள் நடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த கோச்சிங் வகுப்பில் சேர இந்த ஆண்டு 1,476 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் ஒன்றை மடங்கு அதிகமாகும். இதை குறிப்பிட்டு பேசிய யோகி ஆதித்யநாத் , "உத்தரப் பிரதேசத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மீது இளைஞர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Yogi Adityanath is proud that the interest of youth has increased in Uttar Pradesh civil service exams

மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, "கடந்த ஆண்டு 960 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை 1,476 அப்ளிகேஷன்கள் வந்திருக்கின்றன. இவர்களுக்கான நுழைவு தேர்வு செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் நடைபெறும்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. இதுவரை சுமார் 13 பேர் இதில் பயின்று ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளனர். இது தவிர 19 பேர் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் கூடுதல் வேலை வாய்ப்பும் கிடைக்கும். சமஸ்கிருதத்தை ஊக்குவிக்கவும், மொழியை வேலைவாய்ப்பு சார்ந்ததாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+