தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்த முயற்சி! உ. பியில் புதிய திட்டத்தை அறிவித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக காலி மனைகளை விற்பனை செய்வதற்காக புதிய திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக காலி மனைகளை விற்பனை செய்வதற்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) கிரேட்டர் நொய்டாவின் செக்டார்-28ல் உள்ள ஐந்து வகையான மனைகளை விற்பனை செய்யும். குடியிருப்புகளை உருவாக்க விரும்பும் நிறுவனங்கள் இந்த நிலங்களை நியாயமான விலையில் வாங்கலாம்.
அதன்படி பிரீமியம் ரூ.28.17 கோடி முதல் ரூ.176 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை ஹெவியா இருந்து வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக நியாயமான விலையில் மனைகளை விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என நம்புவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications