வேகமாக வளர்ச்சியடையும் உ.பி! யோகி ஆதித்யநாத் கொடுத்த உத்தரவு.. பம்பரமாய் சுழலும் அரசு அதிகாரிகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கும், ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவை மீறி திட்டங்கள் தாமதமானால், காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட யோகி, திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தவறும் பட்சத்தில் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகளை உரிய காலத்தில் முடிக்காத ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் பெயர் 'ப்ளாக்' லிஸ்டில் சேர்க்கப்படும்.
இந்நிறுவனங்கள் அடுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாது. தற்போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி எனும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி ஒரே நேரத்தில் 13 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சில மாவட்டங்களில் இந்த கட்டுமான பணிகள் 50 சதவிகிதத்தை கூட தாண்டவில்லை. இது ஏராளமான விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது. எனவேதான் யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications