"தொப்பியில்" ரத்தம்.. அகிலேஷை ரவுண்டு கட்டும் பாஜக.. திமிறி எழும் சமாஜ்வாதி.. பரபர "சிவப்பு அரசியல்"
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் கட்சியை டேமேஜ் செய்து வருகிறது பாஜக மேலிடம்
லக்னோ: "கர சேவகர்களின் ரத்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளது... சிவப்பு தொப்பிகளை குண்டர்கள் போல் அவர்கள் அணிந்துள்ளனர்" என்ற மிக முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக தன்னுடைய பிரச்சாரத்தை வேகப்படுத்தி உள்ளது.. இந்த "ரத்த அரசியல்" எந்த அளவுக்கு பாஜகவுக்கு வெற்றியை பெற்று தரும் என்பது எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
கடந்த எம்பி தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உபியில் கிடைத்த அதிகமான தொகுதிகளே அடித்தளமிட்டன.. 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருந்தது பாஜக...
இப்போதும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், உபியை தன்னுடைய கோட்டையாக கையில் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

யோகி
அதனால்தான், இந்த முறையும் பாஜக தலைவர்கள் உபியிலேயே தொடர்ந்து முகாமிட்டு வருகின்றனர்.. வழக்கமான தேர்தலை போலவே இந்த முறையும் சந்தித்துவிடலாம் என்று பாஜக கணக்கு போட்டிருந்தது.. ஆனால், சமாஜ்வாதி அகிலேஷின் ஆதரவு என்பது பன்மடங்காக பெருகிவிட்டதை பார்த்து, பாஜக சற்று மிரண்டுதான் போயுள்ளது.. ஆரம்பத்தில் அகிலேஷின் அரசியலை பாஜக பெரிதுபடுத்தவில்லை.. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகளை பார்த்துதான் அரண்டுவிட்டது.

கணிப்புகள்
அந்த கணிப்புகளில், எதிர்பார்த்தபடியே பாஜக முதலிடத்தில் இருந்தாலும், அடுத்த இடத்தில் அதுவும் நெருக்கத்திலேயே சமாஜ்வாதி விரட்டி விரட்டி வந்ததை பார்த்து பாஜக மிரண்டுதான் போனது.. வழக்கம்போல் டஃப் தரும் காங்கிரஸ் சிங்கிள் டிஜிட் வெற்றியை பெறும் என்ற ஆறுதல் கணிப்புகள் இருந்தாலும், இப்படியே விட்டால் அகிலேஷின் விஸ்வரூபம் பெருகிவிடும் எனபதையும் பாஜக புரிந்து கொண்டுவிட்டது.. அதனால்தான், உத்தர பிரதேச பொறுப்பையும் அமித்ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்...

பிரச்சாரங்கள்
இப்போது பிரச்சாரங்களில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பாஜக கையில் எடுத்துள்ளது வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.. அமித்ஷாவும் சரி, பிரதமர் மோடியும் சரி, முதல்வர் யோகியும் சரி, சமாஜ்வாதி தொப்பியில் ரத்தம் படிந்துள்ளதாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.. கடந்த ஒரு வாரகாலமாகவே, இந்த தலைவர்களின் பிரச்சாரங்கள் இதை மட்டுமே நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முதல்வர் பேச்சு
"நேற்றுமுன்தினம்கூட யோகி ஆதித்யநாத் பேசும்போது, முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அயோத்தியில் சுட்டுக் கொல்லப்பட்ட கர சேவகர்களின் ரத்தத்தில் சமாஜ்வாதி கட்சியின் தொப்பி வர்ணம் பூசப்பட்டுள்ளது... சிவப்பு தொப்பிகளை குண்டர்கள் போல் அவர்கள் அணிந்துள்ளனர்... குற்றவாளிகள் பயப்படுவதை உறுதிசெய்து அவர்கள் கூப்பிய கைகளுடன் காவல்துறையினரிடம் சரணடைவதை உறுதி செய்யும் அதே வேளையில், மக்களைப் பாதுகாக்கவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் என்னுடைய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது" என்றார்.

அமித்ஷா
2 நாட்களுக்கு முன்பு அமித்ஷா வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தபோது, "முந்தைய சமாஜ்வாதி அரசு மாநிலத்தின் ஏழை மக்களை புறக்கணித்தது. வாசனை.. திரவிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சில நண்பர்களுக்காக மட்டுமே அந்த அரசு வேலை செய்தது. குற்றச்சாட்டுகளை வேண்டுமானால் மறுக்க முடியும்.. ஆனால் உண்மையை மாற்ற முடியாது. உபியின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விமர்சிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எந்த தகுதியும் கிடையாது.. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் உபியில் குண்டர்களின் ராஜ்ஜியம் மறுபடியும் தலைதூக்கும்.. எங்கே, நாங்க யாராவது ஊழல் செய்துவிட்டதாக சொல்ல சொல்லுங்க பார்ப்போம்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரதமர் மோடி
நேற்றுகூட பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றும்போது, சமாஜ்வாதி கட்சியினர் எங்களை பழிவாங்குவதற்கான வாய்ப்பை தேடுகிறார்கள்... காரணம், பழிவாங்குவதுதான் அவர்களின் சித்தாந்தம்.. அன்று இங்கு ஏகப்பட்ட மாபியாக்கள், குண்டர்கள் இருந்தனர்.. சட்டத்திற்கு மேலானவர்கள் என்று தங்களை தாங்களே கருதி கொண்டுள்ளனர்..

உபி அரசு
ஆனால், இன்று சட்டத்தின் அர்த்தத்தையே அவர்களுக்கு இந்த உபி பாஜக அரசு கற்று தந்துள்ளது.. 5 வருடங்களுக்கு முன்பு, மக்கள் பயந்து கிடந்தனர்.. அப்போது, கடத்தல் போன்றவை நடுத்தர வணிகர்களின் வாழ்க்கையையே அழித்துவிட்டது. கொள்ளையர்கள் அட்டகாசத்தினால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர்.. அப்படி இந்த மாநிலத்தை பிரிக்க நினைத்தவர்களுக்கு பாஜக தக்க பதிலடி தந்துவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

டேமேஜ்
பாஜக தன்னுடைய சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்காமல், அகிலேஷை டேமேஜ் செய்வதிலேயே குறியாக இருப்பதுதான் சமீபத்திய பிரச்சாரங்களில் தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த ரத்த அரசியல் பாஜகவுக்கு கை கொடுக்குமா என்று தெரியவில்லை.. சமாஜ்வாதி ஆட்சியில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகிறார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைக்கும் அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளில் உபியில் பெண்களின் மீதான வன்முறை தாக்குதல், பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம், தலித் மக்களின் மீதான அடக்குமுறைகளை பற்றி உபி மக்களும் நன்றாகவே உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

துணை புரியுமா
அதுமட்டுமல்ல, உபி மாநிலத்தை பொறுத்தவரை தேர்தலுக்கு முந்தைய கடைசி கால கட்டத்தில்தான், அரைகுறையாக விடப்பட்டிருந்த திட்டங்கள் கையில் எடுக்கப்பட்டன.. புது புது அறிவுப்புகளும் மளமளவென வெளியிடப்பட்டன.. எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனாவை மாநில அரசு கையாண்டது, கங்கையில் சடலங்கள் மிதந்தது, விவசாயிகள் மீது கார்களை ஏற்ற முயன்றது, என எத்தனையோ குற்றச்சாட்டுகள் வரிசைகட்டி நின்றாலும், எதை பற்றியும் பேசாமல், அகிலேஷின் இமேஜை மட்டுமே பாஜக மேலிட தலைவர்கள் குலைக்க பார்ப்பது, அக்கட்சியின் கலக்கத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. எனினும், "ரத்த அரசியல்" பாஜகவுக்கு துணை புரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications