திருந்தவே மாட்டாங்க! பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கணவரை இறுக்கி அணைத்தபடி பயணம்..குறுக்கே வந்த போலீஸ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பைக்கில் பயணம் செய்த இளம் ஜோடி கட்டி அணைத்தபடியே பயணித்த வீடியோ வைரலான நிலையில் அவர்களுக்கு ஹபூர் போலீஸார் ரூ 8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சாலைகளில் பைக் ஓட்டுவோர் ஸ்டன்ட்களை அதாவது சாகசங்களை நடத்துவதை பார்த்துள்ளோம். வீலிங் செய்வது, கைகளை விட்டுவிட்டு இயக்குவது, பின்னோக்கி பயணிப்பது என செய்வர்.

ஆனால் அண்மைக்காலமாக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு அருவருக்கத்தக்க செயல் பிரபலமாகி வருகிறது. அதாவது பைக்கில் டேங்கின் மீது பெண் அமர்ந்து கொண்டு பைக் ஓட்டும் ஆணை கட்டி பிடித்தபடியும் முத்தம் கொடுத்தபடியும் சாலைகளில் பயணிக்கிறார்கள்.
இத்தனை பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம் நாச்சம் இல்லாமல் இவர்கள் செய்யும் செயல் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. ஒருவர் செய்தது போய் தற்போது எங்கு பார்த்தாலும் இது போல் பயணம் செய்கிறார்கள். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் இந்த செயலை குழந்தைகள் கூட காண்கிறார்கள்.
இவர்களுக்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது என்பதுதான் சமூகஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹபூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 9 இல் ஒரு தம்பதி இரு சக்கரவாகனத்தில் பயணித்தனர். அதில் அந்த பெண் பெட்ரோல் டேங்க் மீது உட்கார்ந்து கொண்டார்.
அவர் வண்டி ஓட்டும் அவருடைய கணவரை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டார். இப்படியே இவர்கள் வாகனத்தை இயக்கியதை பலர் வீடியோ எடுத்தனர். அப்போது கூட நம்மை பலர் பார்க்கிறார்கள் என்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாமல் கேப் விடாமல் பயணித்தபடியே இருந்தனர்.
இவர்களுக்கு இந்த செயல் சமூகவலைதளங்களில் வைரலானது. தம்பதியின் பொறுப்பற்ற செயல் என்றும் இது போல் சாலைகளில் விபத்தை அறியாமல் இப்படி நடந்து கொள்ளும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் போக்குவரத்து போலீஸாருக்கு இந்த வீடியோவை பார்வேர்டு செய்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பைக் ஓட்டுநருக்கு ரூ 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற ஒரு வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் டெல்லியில் பைக்கில் ஒரு ஜோடி கட்டி பிடித்துக் கொண்டு பயணம் செய்வது போல் இருந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆபத்தான வகையில் வாகனத்தை இயக்குதல், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்டவைகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு ரூ 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications