காந்தாரா மாதிரியே.. சாமியிடம் சீண்டியதும் நிம்மதி போச்சு.. பதறிய திருடனின் "பரிகாரம்" என்ன தெரியுமா?
போபால்: கோயில் நகைகளை திருடிச் சென்ற திருடன் ஒருவன், ஒருசில நாட்களிலேயே அவற்றை திருப்பி வைத்ததுடன் மன்னிப்புக் கடிதமும் எழுதி வைத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
கோயில் நகைகளை எடுத்துச் சென்றது முதல் அவன் பட்ட கஷ்டங்களை அந்தக் கடிதத்தில் விவரித்துள்ள அவன், இனி எந்தக் கோயில் நகைகளையும் திருட மாட்டேன் என உறுதியும் அளித்துள்ளான்.
ஆனால் போலீஸ் விட்டுவிடுமா என்ன?தற்போது அந்த நகைகளின் உள்ள அவனது கைரேகைகள், கடிதத்தில் உள்ள கையெழுத்து ஆகியவற்றை கொண்டு போலீஸார் அவனை தேடி வருகின்றனர்.

சுவாரசிய திருட்டுகள்..
உலகம் முழுவதும் எத்தனையோ திருட்டுச் சம்பவங்கள் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சில திருட்டுச் சம்பவங்களில் மட்டுமே சுவாரசியமான, வேடிக்கையான விஷயங்கள் அரங்கேறி இருக்கும். திருட வந்த வீட்டில் திருடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு செல்வது; சிறிது பணம், நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, "ஐயா தயவுசெய்து போலீஸுக்கு செல்ல வேண்டாம். இனி உங்கள் வீட்டுக்கு வர மாட்டேன்" என வீட்டு ஓனருக்கு கடிதம் எழுதிவிட்டு செல்வது போன்ற விஷயங்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுபோன்ற ஒரு சுவாரசியமான சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

கோயில் நகைகள் அபேஸ்..
மத்திய பிரதேச மாநிலம் பலாஹட் மாவட்டம் லம்தா பகுதியில் ஒரு ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 24-ம் தேதி இரவு நுழைந்த கொள்ளையன் அங்குள்ள வெள்ளி, வெண்கல நகைகள் ஏராளமானவற்றை கொள்ளையடித்துச் சென்றான். திருடுபோன நகை மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து அறிந்த கோயில் நிர்வாகிகள் இதுகுறித்து போலீஸுக்கு புகார் அளித்தனர். போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

திருப்பி அனுப்பிய திருடன்
இந்நிலையில், நேற்று அதிகாலை அந்தக் கோயிலுக்கு முன்பு ஒரு பெரிய சாக்குப் பை இருந்தது. கோயிலை திறக்க வந்த பூசாரி, அந்த சாக்குப்பையை திறந்து பார்த்தார். அப்போது சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன நகைகள், பொருட்கள் என அனைத்தும் அதில் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அந்த சாக்குப்பையில் ஒரு பேப்பர் இருந்ததையும் பார்த்தார்.

தூக்கமில்லை.. நிம்மதி இல்லை
அதில், "கோயில் நகைகளை எடுத்துச் சென்றதில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. திருடிய அடுத்த நாள் முதலே காய்ச்சலாலும், தூக்கமின்மையாலும் அவதிப்பட்டு வருகிறேன். எனவேதான், இந்த நகைகளை திருப்பிக் கொடுக்கிறேன். கோயில் நகைகளை திருடுவது எவ்வளவு பெரிய தவறு என்பது எனக்கு புரிந்துவிட்டது. இனி கோயில் சொத்துகளை தொட மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என அந்தக் கடிதத்தில் திருடன் எழுதி இருந்தான். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு கோயில் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், அந்த நகைகளில் உள்ள கைரேகைகள், கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கையெழுத்து ஆகியவற்றை கொண்டு அந்த நன்மனம் கொண்ட திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications