பிஞ்சு சிறுமியை.. மொத்தம் 600 பேராம்.. சிக்கிய 5 பேர்.. அதிர வைக்கும் மதுரை சம்பவம்..!
மதுரையில் 16 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர்
மதுரை: மொத்தம் 600 பேராம்.. மதுரையில் 16 வயது சிறுமியை 600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

இதையடுத்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக சம்பவ இடத்துக்கு சென்று சோதனையை நடத்தினர். அப்போதுதான் 16 வயது சிறுமி அங்கு சிக்கியிருப்பதையும், ஒரு சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் பெண்களே ஈடுபடுத்தி வந்ததையும் அறிந்தனர்.
இதையடுத்து, சிறுமியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த புரோக்கர்களான அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு, ஆட்டோ ஓட்டுனர் சின்னதம்பி உட்பட 7 பேரை ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியையும் மீட்டனர்.. உடனடியாக அவருக்கு மெடிக்கல் செக்கப் நடத்தப்பட்டது.. பின்னர் காப்பகத்தில் பத்திரமாக சிறுமியையும் ஒப்படைத்தனர்.. மதுரை மாவட்டத்திலேயே பாலியல் தொழிலில் முக்கிய புள்ளிகளாக தேடப்பட்டு வந்தவர்கள் இந்த பெண் புரோக்கர்கள்தானாம்.. இவர்களைதான் இத்தனை நாட்களாக போலீசார் தேடி வந்தனராம்.. அவர்கள் தற்போது கைதாகி உள்ளதால், போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
அதாவது, கடந்த 5 வருஷத்தில், சிறுமியிடம் 600க்கும் மேற்பட்ட நபர்களின் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.. அதனால், அந்த 600 பேர் யார் என்ற விவரங்களை சேகரித்து, தனிப்படை ஒன்றையும் அமைத்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இப்படித்தான், சென்னை வண்ணாரப்பேட்டையிலும் ஒரு சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்தது.. அதில் ஏராளமான அதிகாரிகள், போலீஸார், விஐபிக்கள் சிக்கியதாக கூறப்பட்டது.. அது தொடர்பான விசாரணை தற்போதும் நடந்து வரும் நிலையில், இந்த மதுரை ச்ம்பவம் அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications