நீதிமன்றத்துக்கு படையெடுத்த 25 பேர்-வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து!பின்னணி என்ன?
மதுரை: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 25 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்தான் வன்னியருக்கான் 10.5% உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
1989-ம் ஆண்டு முன்னர் வரை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமூகம் இருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மொத்தம் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு கோரி முதல் கட்ட போராட்டத்தை வன்னியர் சங்கம் 1987-ல் நடத்தியது. வடதமிழகத்தில் பற்றி எரிந்த போராட்டத்தின் போது போலீசாரின் அடக்குமுறை, துப்பாக்கி சூடுகளுக்கு மொத்தம் 21 பேர் பலியாகினர். தமிழகத்தில் 1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்துக்குப் பிந்தைய மிகப் பெரிய கிளர்ச்சி இது.

1989-ல் 20% இடஒதுக்கீடு
பின்னர் 1989-ல் திமுக ஆட்சி அமைந்த போது முதல்வராக இருந்த கருணாநிதி, வன்னியர்கள் உட்பட பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்த 108 சமூகத்தினரை பிரித்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்ற புதிய பிரிவை உருவாக்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டில் இருந்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

உள் இடஒதுக்கீடு கோரிக்கை
இதன்பின்னர் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களை அடுத்து மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு மட்டும் 10.5% உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சீர்மரபினருக்கு 7% இடஒதுக்கீடும் எஞ்சிய மிக பிற்படுத்தப்பட்டோருக்கு அதாவது 22 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது.
Recommended Video

25 பேர் வழக்கு
வன்னியர்களுக்கு மட்டுமே 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏராளமான சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும் கூட அதை அந்த சமூகத்தினர் ஏற்க மறுத்தனர். தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக அப்போதே அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. சாமிநாதன் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை தொடர்ந்தனர். பின்னர் இந்த வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சிறப்பு வழக்காக மாற்றப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையின் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்தது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து
இவ்வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இடையீட்டு மனுதாரராகவும் இணைந்து கொண்டார். இந்த வழக்குகளின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் 25 மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இன்று அதிரடியாக ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் எப்படி குறிப்பிட்ட ஜாதியினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் இன்றைய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications