பாலக்காடு பக்கத்தில் ஒரு ஹாஸ்பிடல் இருக்கு! அங்க போங்க! வைகோவுக்கு அட்வைஸ் செய்த கருமுத்து கண்ணன்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் மறைவையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற வைகோ, கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.
5 நாட்களுக்கு முன்னர் தான் கருமுத்து கண்ணனிடம் தொலைபேசியில் பேசியதாகவும், பாலக்காடு பக்கத்தில் ஒரு ஹாஸ்பிடல் பெயரை கூறி தன்னை அங்கு சென்று வைத்தியம் பார்க்குமாறு கூறியவர் திடீரென மறைந்துவிட்டாரே என ஆற்றாமையை கொட்டினார்.

என் உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கருமுத்து கண்ணன் என்றும் வைகோ உருகினார்.
விருந்தோம்பலுக்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர் கருமுத்து கண்ணன் என்றும் அவரது மதுரை வீட்டிற்கு 6 முறை சென்று தாம் சாப்பிட்டிருப்பதாக வைகோ கூறினார்.
இதேபோல் டெல்லிக்கு வந்தாலும் தாம் தங்கியிருக்கக் கூடிய விடுதிக்கு என்னை அழைத்துச் சென்று அவர் சைவ உணவு சாப்பிடக் கூடியவராக இருந்தாலும் என்னை அசைவ சாப்பிட வைப்பார் என வைகோ பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.
கருமுத்து கண்ணனின் மறைவு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் மதுரை மாநகர மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு எனவும் வைகோ கண்ணீர் சிந்தினார்.
வைகோவை போலவே அமைச்சர் பிடிஆர், ஹெச்.ராஜா, உள்ளிட்ட பிரமுகர்களும் கண்ணீர் விட்டு அழுதவாறு கருமுத்து கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்படியென்றால் அவர்களிடத்தில் கண்ணன் எந்தளவு அன்பு வைத்திருப்பார் என்பது உணரப்படுகிறது.
நாம் ஏற்கனவே ஒன் இந்தியா தமிழில் கூறியிருந்ததை போல், தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரிகளில் ஒரு ரூபாய் கூட இதுவரை எந்த மாணவரிடமும் கருமுத்து கண்ணன் டொனேஷனோ, கூடுதல் கட்டணமோ வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications