மதுரையில் பரவி வரும் ‘காய்ச்சல்’.. 52 பேர் மருத்துவமனையில் அனுமதி! கண்காணிப்பு தீவிரம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடை மழை பொழிந்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மழைநீா் சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கி உள்ளன. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கனமழைக்கு மத்தியில் 8 மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரையில் சிறார்கள் உட்பட 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 முதல் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காய்ச்சலுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 52 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மதுரை மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications