மதுரையில் 5 கி.மீ. நடைப்போட்டி.. வெற்றிபெற்ற 66 வயது முதியவர்!
மதுரை: தனியார் கல்லூரியில் நடைபெற்ற மூத்தோருக்கான 5 கி.மீ. தூர நடைபோட்டியில் 66 வயது முதியவர் முதலிடம் பிடித்துள்ளார்.
நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று முதியோருக்கான தடகள போட்டிகள் தொடங்கின.
தமிழ்நாடு மூத்தோர் தடகள கழகம் மற்றும் மதுரை மாவட்ட மூத்தோர் தடகள கழகம் சார்பில் 39 வது ஆண்டாக நடைபெறும் இத்தொடர் நாளை நிறைவடைய உள்ளது.
இதில் தடகள விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் ஆசியக்கோப்பை, தெற்காசிய கோப்பை, தேசிய, மாநில விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற 2,500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். அதன் ஒருபகுதியாக நேற்று 5 கிலோ மீட்டர் தூர நடைபோட்டியில் நடைபெற்றது.

இப்போட்டியை முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம்.எம்.எஸ். சஹாபுத்தீன் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து உள்ளார்.
அவருக்கு காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் பதக்கம் வழங்கி கவுரவித்தார். இந்த போட்டியில் பதக்கம் வென்றவர்கள் சென்னையில் நடைபெற இருக்கும் தேசியளவிலான போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதில் வெற்றிபெற்றால் பின்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இதில் வெற்றிபெற்ற 66 வயதான சஹாபுத்தீன் இதற்கு முன் தடகளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் இவர் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications