கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாதா? பிடிஆர் தாய்க்கு எதிரான மனு தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் 8 நாள் சிகர நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என ஆகம விதியில் எங்கு உள்ளது? கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் 8 வது நாள் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சியம்மன் பட்டாபிேஷகத்தில் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்நிலையில் தான் கணவரை இழந்தவரிடம் செங்கோல் வழங்கக்கூடாது எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தினகரன் என்பவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‛‛மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆகம விதிகள் படி தான் நடக்கிறது. விழாவின் 8 வது நாள் மீனாட்சியம்மன் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அம்மன் கையில் இருந்து செங்கோல் கோவில் அறங்காவலர் குழு தலைவரிடம் வழங்கப்படும். ஆகம விதிகளின் படி திருமணம் ஆகாதவர், கணவரை இறந்தவர் செங்கோலை பெற்று கொள்ள முடியாது.
தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாய் ருக்மணி உள்ளார். இவர் கணவரை இழந்தவர். இதனால் செங்கோலை அவருக்கு பதிலாக உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு என்பது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம விதிகளின்படி செங்கோல் வழங்க வேண்டும். தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் ருக்மணியிடம் செங்கோல் வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் வீரா கதிரவன், ‛‛இதுபோன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2 முறை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி சரவணன், ‛‛கணவரை இழந்தவர் செங்கோல் வாங்கக்கூடாது என்று ஆகம விதிகளில் எங்கு உள்ளது? ஆகம விதியில் எந்த இடத்தில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும் விழா தொடங்கிய பிறகு இறுதிக்கட்டத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. மேலும் இந்த காலத்திலும் இதுபோன்ற காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications