மாண்புமிகு ‘ஏகே’! ஒகே சொல்லு தல.. நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்.. பரபர போஸ்டர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : நடிகர் அஜித் குமாரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இன்று பேரன்புமிகு AK.. என்று மாண்புமிகு-க்கு OK?" என்ற வாசகங்களுடன் தலைமைச் செயலகம், நாடாளுமன்ற பின்னணியில் நடிகர் அஜித் குமாரின் படத்துடன் மதுரை அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வரும் ஜனவரி 11ஆம் தேதி அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'துணிவு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதே நாளில், விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது.

இதனால், இருவரின் ரசிகர்களும், மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அஜித்

அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தவர். படத்தின் புரோமோஷனுக்காகக்கூட அஜித் ஊடகங்களைச் சந்திப்பது இல்லை. எந்தக் காலத்திலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். தனது தனிப்பட்ட வாழ்க்கை ஊடகங்களின் வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருந்து வருகிறார்.

அஜித் - அரசியல்

அஜித் - அரசியல்

அஜித் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகும். ஆனால் அஜித் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதால் அவருடைய மேலாளர் தரப்பிலிருந்து அதற்கான விளக்கங்கள் அளிக்கப்படும். கடந்த ஆண்டு 'அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயாராகிறார் என்றே நினைக்கின்றேன்' என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அஜித் தரப்பிலிருந்து ட்விட்டரில், "அஜித்துக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற எண்ணமே இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

 போஸ்டர் யுத்தம்

போஸ்டர் யுத்தம்

எனினும், அவ்வப்போது, அஜித் அரசியலுக்கு வருவதாக பரபரப்புகள் கிளம்பும். நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும்போதெல்லாம், அஜித் ரசிகர்களும் அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற ரீதியில் போஸ்டர்கள், பேனர்களை ஒட்டி பரபரப்பைக் கிளப்புவார்கள். அந்தவகையில், பொங்கலுக்கு விஜய், அஜித் படங்கள் ஒன்றாக ரிலீஸாக இருக்கும் நிலையில், அஜித்தை அரசியலுக்கு அழைத்து பரபரப்பைக் கூட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

மாண்புமிகு AK

மாண்புமிகு AK

மதுரையில் பல இடங்களில் துணிவு பட வெளியீட்டை ஒட்டி அஜித் குமார் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், "இன்று பேரன்புமிகு AK.. என்று மாண்புமிகு-க்கு OK? உங்கள் துணிவுக்காக காத்திருக்கிறோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தலைமைச் செயலகம், நாடாளுமன்றம், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகிய படங்கள் பின்னணியில் இருக்க, நடிகர் அஜித் குமாரின் பிரமாண்ட புகைப்படத்துடன் மதுரை அஜித் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வருகை

அரசியல் வருகை

கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழா மேடையில் துணிவாக எழுந்து பேசியவர் அஜித். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதன் மூலம் அஜித் அரசியல் வருகை தொடர்பான பேச்சுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+