Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் சாதாரண தலைவன் கிடையாது.." கண்கள் சிவந்த சரத்குமார்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவை அதிர வைத்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக நடிகர் சரத்குமார் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி அமைத்தது நல்ல முடிவு என வரவேற்றுள்ள அவர், எல்லா மாநிலங்களிலும் இதேபோன்ற ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசனின் 61ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணியில் பாஜக சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

sarathkumar hema committee report malayalam cinema

இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை, மத்திய அரசின் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் கலந்து கொண்டார்.

நடிகர் சரத்குமார்: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார் ஹேமா கமிட்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள 281 பக்கங்களில் 160 பக்கங்களை நான் படித்துவிட்டேன். இந்த விவகாரம் குறித்து நாம் விலாவரியாக பேச வேண்டியுள்ளது.

இது தொடர்பாக நான் ஏனோ தானோ என்று பேச விரும்பவில்லை. சினிமா துறை மிக மோசமாக உள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் அதிகமாக இருப்பதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் பெயர்களைக் குறிப்பிட்டு ஹேமா கமிட்டி சொல்லவில்லை. எனவே, இதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. மலையாள சினிமாவில் உள்ள நடிகர்கள் தவறு செய்துள்ளாரா இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அவர்களின் கடமை தான்.

சீர்படுத்த வேண்டும்: நிர்பயா கொலை வழக்கு, கொல்கத்தா சம்பவம் எனப் பெண்கள் மீதான அத்துமீறல் நிகழ்வுகள் நாட்டில் எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஏதோ ஒரு சூழ்நிலையில் இது போன்று நடக்கின்றது. "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற எம்.ஜி.ஆர் பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் மற்றவர்கள் என்ன செய்தனர் என யோசிப்பதைக் காட்டிலும், நம் மக்களை நாம் எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்பதே எனது சிந்தனை.

கேரளாவில் நடிகைகள் கேரவனில் கேமரா குறித்து எனது மனைவி பேசியிருந்தார். அப்போதே இதைச் சொல்லாமல் ஏன் இப்போது சொல்கிறார் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். அனைவராலும் அப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களை மதிக்க வேண்டும்: என்ன பொறுத்தவரை நாம் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பைத் தர வேண்டும். பிரதமர் மோடி சொன்னது போல பாலியல் புகார்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை இருக்கிறது என்று என்று தெரிந்தால் தான் இதைத் திருத்த முடியும்.

நான் சாதாரண தலைவன் இல்லை: பிக்பாஸ் நடிகை யாரும் என்னிடம் புகார் தரவில்லை.. நான் மற்றவர்களைப் போல் சாதாரண தலைவன் கிடையாது. என்னிடம் புகார் கொடுத்தால் பார்க்கிறேன் என்று சொல்லித் தள்ளிப்போட எல்லாம் மாட்டேன்.. உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

ஹேமா கமிட்டியை போல எல்லா மாநிலங்களிலும் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி வெறும் கண்துடைப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது. தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேவை. நாம் பெண்களை மதிக்க கற்றுக் கொண்டால் மட்டுமே இவை எல்லாம் மாறும்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+