துணிவு இருந்தாலும் தளபதி தான்! ‘வாரிசு’வே இருக்காது! ஆரம்பித்து வைத்து மதுரையன்ஸ்! சூடுபிடித்த களம்!
மதுரை : தல என ரசிகர்களால் முன்பு அன்போடு அழைக்கப்பட்ட அஜித்குமாரின் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் மதுரையில் தொடங்கிய அஜித், விஜய் ரசிகர்களின் யுத்தம் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் பரவி இருக்கிறது.
இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக உயர்ந்திருக்கும் நடிகர் விஜய்யும், தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு தற்போது ஏகே என மாறி இருக்கும் நடிகர் அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் அவர்களது ரசிகர்களை பொறுத்தவரை எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். நடிகர் விஜய்யின் திரைப்பட அப்டேட்டுகள் வரும்போது அஜித் ரசிகர்களும், நடிகர் அஜித்தின் திரைப்பட அப்டேட்கள் வரும்போது விஜய் ரசிகர்களும் கலாய்ப்பதும் வாடிக்கைதான்.

அஜித் - விஜய்
இந்த நிலையில் தான் தற்போது விஜய் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரணம் நடிகர் அஜித் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திலும் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகின்றனர்.

துணிவு
தற்போது துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி இருக்கும் நிலையில் துணிவு என்பதெல்லாம் ஒரு டைட்டிலா என விஜய் ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும் மாஸ் ஹீரோவான அஜித் படத்தின் பெயர்கள் எல்லாம் வலிமை, விசுவாசம், நேர்கொண்ட பார்வை என சாப்ட் கார்னர் உடன் இருப்பதாக விமர்சித்தனர். இதை அடுத்து நடிகர் விஜயின் வாரிசு பட அறிவிப்பு வெளிவந்த போது வாரிசு என்பதெல்லாம் ஒரு பெயரா என அஜித் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

போஸ்டர் யுத்தம்
இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து சண்டையிட்டுக் கொள்வதை ரசிகர்களின் வாடிக்கையாகி போனது. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வெடித்து போஸ்டர் யுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள் மதுரை ரசிகர்கள். நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் டைட்டில் வெளியான நிலையில் அதனை விமர்சிக்கும் வகையில் துணிவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தளபதி எண்ட்ரி தான் ஃபர்ஸ்ட் என போஸ்டர் அடித்து இருந்தனர்.

கடும் மோதல்
இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில் ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் ரசிகர்கள் இடையே மோதல் மூண்டது. இதை அடுத்து தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரைக்கார அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒன்றினை ஒட்டி இருக்கின்றனர். அதில்,"எங்களுக்கு எதிரியா இருக்கணும்னு நினைக்காத ஏன்னா எங்களுக்கு துணிவு ஜாஸ்தி மீறி நினைச்சா வாரிசவே அழிச்சிடுவோம்" என ஒட்டியுள்ளனர். இப்படி அஜித் விஜய் ரசிகர்கள் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் கடும் மோதலை உருவாக்கி இருக்கிறது. வாரிசு துணிவு என்ற ஹாஷ்டேக்குகளுடன் விஜய் அஜித் ரசிகர்கள் காரசார விவாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை











Click it and Unblock the Notifications