மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் வீட்டில் ஏன் ரெய்டு நடக்கல..? 'கையெழுத்து போட்டதே அவர்தானே?’.. கொளுத்திப்போட்ட உதயகுமார்!

Google Oneindia Tamil News

மதுரை : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெறும் நிலையில் நிதியமைச்சராக இருந்து அனைத்து திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்த ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்த ரெய்டு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நிலையில், அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என கருத்து தெரிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய ஈபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார், ஓபிஎஸ்ஸின் கருத்தை விமர்சித்துள்ளார்.

2532.. 3 மூவ்.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய எடப்பாடி.. முறியடிக்க ஓபிஎஸ்ஸின் அடுத்த பிளான் என்ன? 2532.. 3 மூவ்.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய எடப்பாடி.. முறியடிக்க ஓபிஎஸ்ஸின் அடுத்த பிளான் என்ன?

பலம் காட்டும் எடப்பாடி

பலம் காட்டும் எடப்பாடி

அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று திமுக அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஓபிஎஸ்ஸை விமர்சித்துள்ளார்.

அய்யப்பன் தகுதி நீக்கம்?

அய்யப்பன் தகுதி நீக்கம்?

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்பி உதயகுமார், "உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாயமாகி வருகின்றனர். உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற அய்யப்பன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளைக்கே உசிலம்பட்டியில் இடைத்தேர்தல் வந்தாலும் வரும். அப்படி வந்தால் இரட்டை இலை தான் வெற்றி பெறும்." என்றார்.

எத்தனை காசி போனாலும்

எத்தனை காசி போனாலும்

ஓ.பன்னீர்செல்வம், ராமேஸ்வரம், காசிக்கு ஆன்மீக பயணமாக சென்றதை சுட்டிக்காட்டிப் பேசிய உதயகுமார், தொண்டர்கள் என்ற போர்வையில் குண்டர்களை கூட்டிக்கொண்டு அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்து துவம்சம் செய்த ஓ.பன்னீர்செல்வம் எத்தனை காசிக்கு சென்றாலும் அவர் செய்த பாவம் தீராது. தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும் என விமர்சித்தார்.

கையெழுத்து போட்டதே

கையெழுத்து போட்டதே

மேலும் பேசிய ஆர்பி உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்ற சோதனை குறித்து கேட்டதற்கு அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என்று சொன்ன ஓபன்னீர்செல்லம் தான் அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்டவர். உங்கள் வீட்டிற்கு ஏன் சோதனை நடத்த வரவில்லை? இப்போது மட்டும் அரசு அவர்களின் கடமையை செய்ய தயங்குவது ஏன்? உங்கள் வீட்டில் அல்லவா சோதனை நடைபெற்று இருக்க வேண்டும் என விமர்சித்தார்.

சங்கு ஊதிட்டாங்க

சங்கு ஊதிட்டாங்க

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. வீரப்பனையே சுட்டு வீழ்த்திய ஸ்காட்லாந்திற்கு இணையாகப் பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்று என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் சங்கு ஊதி விட்டனர் எனச் சாடினார்.

English summary
ADMK ex-ministers houses are being raided, former minister RB Udhayakumar has questioned why O. Panneerselvam, who approved all the plans as finance minister, did not conduct a raid on his house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X