மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 மாத சிறைவாசம்.. கடைசி நேரத்தில் கையெழுத்திட்ட உறவினர்.. ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி!

கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி இன்று மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி!

    மதுரை: கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி இன்று மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் நிர்மலா தேவி ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி.

    இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார். இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர்.

    கல்விக் கடன் தள்ளுபடி.. திமுக, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்.. தாக்கத்தை ஏற்படுத்துமா? கல்விக் கடன் தள்ளுபடி.. திமுக, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்.. தாக்கத்தை ஏற்படுத்துமா?

     சிபிசிஐடி விசாரணை

    சிபிசிஐடி விசாரணை

    இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வழக்கை சிபிசிஐடி போலீஸார் பல மாதத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

     சிறையில் இருந்தார்

    சிறையில் இருந்தார்

    11 மாதமாக இவர் அந்த சிறையில் இருந்தார். இவருக்கு இடையில் பல முறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தொடக்கத்தில் அரசு இவரின் ஜாமீன் மனுக்களை எதிர்த்தது. கடந்த வாரத்தின் போது அரசு இவரின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

     ஜாமீன் வழங்கியது

    ஜாமீன் வழங்கியது

    v இந்த நிலையில் கடந்த வாரம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. முதலில் இவருக்கு உறவினர்கள் யாரும் ஜாமீன் கையெழுத்து போட முன்வரவில்லை. கடைசியில் நிர்மலா தேவியின் மூத்த அண்ணன் ரவி மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் ஜாமீன் கொடுத்து கையெழுத்திட்டனர். இதனால் நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது.

     ஜாமீனில் விடுதலை

    ஜாமீனில் விடுதலை

    இதையடுத்து இன்று சிறையிலிருந்து நிர்மலா தேவி ஜாமீனில் விடுதலை ஆனார். 11 மாதங்களாக சிறையில் இருந்தார் நிர்மலா தேவி. விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இவர் விடுதலையாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After 11 months, Nirmala Devi releases from Madurai jail on Bail today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X