யாருக்கு வெற்றி? ஓட்டு போட வந்த மு.க.அழகிரி கொடுத்த சூசக பதில்!
மதுரை: மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சட்டமன்ற தேர்தலில் இன்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்களித்த பிறகு, தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மு.க.அழகிரி.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதுரை மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.வி.எஸ். நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க. அழகிரி வாக்களித்தார். வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் களம் சூடாக இருக்கிறது, வெயிலும் அதிகமாக உள்ளது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்" என்று கருத்து தெரிவித்தார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அரசியல் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார் மு.க.அழகிரி. எனினும் தனது வாக்குரிமையை அவர் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் செலுத்தி வருகிறார். வாக்களிப்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்ற கேள்விக்கு, "வாக்களித்த எல்லோரும் என் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன் என்று சொல்லப்போகிறார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன்." என்றார்.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "தெரியவில்லை, நான்தான் அன்றைக்கே சொல்லிவிட்டேனே, யார் வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம் என்று. ஒன்றும் புரியவில்லை. என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். அவ்வளவுதான். தேர்தல் களம் மிகச் சூடாக இருக்கிறது. வெய்யிலும் அதிகமாக இருக்கிறது. முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை." எனத் தெரிவித்தார்.
முக.அழகிரியின் மகள் கயல்விழி, சமீபத்தில் ஒரு பேட்டியில், "ராமனுக்கே 14 வருஷம்தான் வனவாசம், எங்க அப்பாவை ஓரங்கட்டி 15 வருஷம் ஆகிவிட்டது" என தன்னுடைய சித்தப்பா முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய தந்தையை திமுகவில் சேர்த்துக் கொள்ளாதது பற்றி வருத்தமாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஏப்ரல் 23) பதிவாகும் வாக்குகள் வரும் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications