சட்டென பிரேக் போட்ட டிரைவர்.. வரிசையாக மோதிய கார்கள்.. உள்ளே பார்த்தால் 2 "மாஜிக்கள்".. பதறிய அதிமுக
மதுரை: இன்று மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்று வருகின்றனர்.
Recommended Video
தேவர் சிலைக்கு மரியாதை செய்து வழிபாடு நடத்துவதற்காக மக்கள் பசும்பொன் நோக்கி படையெடுத்து உள்ளனர். பல அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் இன்று மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்ற போது மாஜி அமைச்சர்கள் கார்கள் விபத்துக்கு உள்ளானது. அதிமுக மாஜி அமைச்சர்களின் கார்கள் வேகமாக வரிசையில் சென்றன. அப்போது முன்னாள் சென்ற கார் பிரேக் அடித்ததில் பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதின.

கார்கள்
கார்கள் வேகமாக வந்த நிலையில், முன்னால் சென்ற கார் திடீரென டிராபிக் காரணமாக பிரேக் அடித்தது. 50 மீட்டர் இடைவெளி கூட விடாமல் அருகருகே கார்கள் சென்றதால் பின்னால் வந்த காரர்களால் பிரேக் போட முடியவில்லை. இதனால வரிசையாக கார்கள் மோதின. இதனால் அதிமுக கொடி கட்டிய கார்கள் 4 வரிசையாக மோதி முன் பக்கம் கடுமையாக சேதம் அடைந்தன.

மானாமதுரை
மானாமதுரை அருகே நடந்த இந்த விபத்தில் மாஜி அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் சென்ற கார்கள் சிக்கின. இரண்டு பேரும் இருந்த கார்கள் கடுமையாக சேதம் அடைந்தன. இதில் உள்ளே இருந்த மாஜி அமைச்சர்கள் இருவருக்கும் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இவர்களுக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மரியாதை
முன்னதாக பசும்பொன்னில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செய்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ் திமுக அமைச்சர்கள் பலர் சென்று மரியாதையை செய்தனர். அதிமுக சார்பாக திண்டுக்கல் ஸ்ரீநிவாசன், செல்லூர் ராஜு ஆகியோர் சென்று மரியாதை செய்தனர். குரு பூஜை காரணமாக தேவர் சிலைக்கு பல தலைவர்கள் இன்று மரியாதை செய்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications