அமைச்சர் மூர்த்திக்கு எதிராக அழகிரி ஆதரவாளர் மன்னனை நிறுத்தும் அதிமுக? செல்லூர் ராஜு போட்ட கணக்கு!
மதுரை: அதிமுகவில் இணைந்துள்ள மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனை அமைச்சர் மூர்த்திக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வைக்க தயார் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் அமைச்சர் மூர்த்தி மதுரை கிழக்கு தொகுதியில் சுமார் 52 சதவிகித வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதனால் மூர்த்திக்கு எதிராக மன்னனை தேர்தலில் நிறுத்துவது அதிமுகவுக்கு பலனளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2 நாட்களாக மதுரை அதிமுக குதூகலமாக இருக்கிறது. ஏனென்றால் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாக கருதப்பட்ட மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி இருவரும் அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறது. மதுரை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா மூலமாக இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

நீண்ட நாட்களாகவே திமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மன்னன் கோரிக்கை வைத்து வந்தார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த போதும், அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதன் காரணமாக மன்னன் உடனடியாக அதிமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார். அவருடன் எஸ்ஸார் கோபியையும் அழைத்து சென்றிருக்கிறார்.
எஸ்ஸார் கோபி தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்று எதி்ர்பார்த்தார். ஆனால் திமுக ஒப்புக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரால் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக அறுவடை செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மதுரை முன்னாள் மேயர் மன்னன் தேர்தல் பணிகளில் கில்லியாக செயல்படுபவர். மு.க.அழகிரிக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
திருமங்கலம் ஃபார்முலாவை செயல்படுத்தியதில் மன்னனின் பங்கும் அதிகம். இதனால் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்திக்கு எதிரான மன்னனை களமிறக்க அதிமுக தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 2021 சட்டசபைத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பாக மூர்த்தியும், அதிமுக சார்பாக கோபாலகிருஷ்ணனுன் போட்டியிட்டனர்.
இதில் திமுக சார்பாக போட்டியிட்ட மூர்த்தி சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பின் சொந்த தொகுதியில் மூர்த்தி ஏராளமான பணிகளை செய்து முடித்தார். சமூக ரீதியிலான வாக்குகளையும் சரியாக அறுவடை செய்து வருகிறார். இதனால் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட மதுரை அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வந்தனர்.
இப்படியான சூழலில் மன்னன் அதிமுகவில் இணைந்திருக்கிறார். மன்னனை அழைத்த போதே எம்எல்ஏ சீட் கொடுக்கிறோம் என்றே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அழைத்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி இணைப்பு நிகழ்ச்சி நடந்ததாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இது அதிமுகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை தேர்தலுக்கு பின்னரே பார்க்க வேண்டும்.
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்












Click it and Unblock the Notifications