பொம்மை முதல்வர்! எடப்பாடி சொன்னது இன்னைக்கு உண்மை ஆயிருச்சு! போட்டுத் தாக்கிய ஆர்பி உதயகுமார்!
மதுரை : புள்ளி விவரங்களை அப்படியே வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடியார் சொல்லுவது உண்மையிலும் உண்மை என்பது நிருபணம் ஆகியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்," மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும்,நலன்களையும் பேணி காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகிறார்.

ஆர்.பி.உதயகுமார்
இன்றைக்கு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் தவறானது என்பதனால் மாற்றுத்திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என தேசிய பார்வையற்றோர் இணைய கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை இன்றைக்கு அனைத்து பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டதாக கூறியிருக்கிறார்கள். அதிலே கடும் ஊனமடைந்தவர்களுக்கான 1,500 ரூபாய் உதவித்தொகை மட்டுமே,2000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள்
பிறருக்கு உயர்த்தப்படவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உயர்வு வழங்கப்படவில்லை. தமிழக அரசு 2 லட்சம் பேருக்கு உதவி தொகை உயர்த்தப்பட்டதாக கூறியதும் தவறானது. கடும் ஊனம் அடைந்த 15 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு தவறான புள்ளி விவரத்தை முதலில் தெரிவித்த காரணத்தினால், பொதுமக்களுக்கு தவறான தகவல் கொடுப்பது எங்கள் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும் என்கிற காரணத்தினாலே, எங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் என்று மாற்றுத்திறனாளிகள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத வேலைவாய்ப்பினை எடப்பாடியார் கொண்டு வந்ததை இந்த அரசு அதை செயல்படுத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை கருத்திலே கொண்டு டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என்று அவர்கள் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்கள். முதலமைச்சர் பக்க பக்கமாக வெளியிடும் புள்ளி விவரங்கள் அறிவிப்புகள் தவறாக வெளியிடப்படுகிறது என்பதை தொடர்ந்து எடப்பாடியார் தொடர்ந்து இந்த அரசை சுட்டிக்காட்டி குறைகளை எடுத்துக்காட்டி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதன் உண்மை என்பது இன்றைக்கு மாற்றுத்திறனாளிகளே வெளியிட்டிருக்கிற அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்

உண்மையை மறைத்து பொய்
இன்றைக்கு முதலமைச்சர் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதற்கு தயாராக இல்லை உண்மையை மறைத்து பொய்யை தான் அவர்கள் இன்றைக்கு மக்களிடத்திலே விதைத்து வருகிறார்கள் என்பதற்கு இந்த மாற்றுத்திறனாளின் அறிக்கையை சாட்சியாக இருக்கிறது. இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார இந்த அரசு உண்மையை மறைத்து முழு பூசணிக்காய் சோற்றில் மறைத்து நாங்கள் செயல்படுத்தி திட்டங்களை மட்டுமே அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள் தவிர, புதிய திட்டங்களை அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று ஒவ்வொரு நாளும் இன்றைக்கு இந்த அரசுக்கு தொடர்ந்து நினைவூட்டல் செய்து வருகிறார்.

எழுப்ப முடியாது
இன்றைக்கு தூங்குகிறவரை எழுப்பலாம் .ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்கிற அந்த அடிப்படையிலே, இந்த அரசு தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் அறிக்கை கொடுத்து இன்றைக்கு இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் கூட ஆனால் இந்த அரசு தூங்குவதை போல் நடித்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவிலே இந்த நாட்டு மக்கள் இந்த தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தக்க பாடம் புகட்டுகிற நாள் வெகு தொலைவில் இல்லை.

பொம்மை முதல்வராக ஸ்டாலின்
அரசு இதுபோன்ற தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டு பயனாளிகளுடைய மனதை புண்படுத்தாமல் வேதனையைச் செய்யாமல் இருக்க வேண்டும். இன்றைக்கு முதலமைச்சருக்கு கொடுக்கப்படுகிற புள்ளி விவரங்கள் அதை அப்படியே அவர் வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடியார் சொல்லுவது உண்மையிலும் உண்மை என்பது ஆகியுள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications