மழையால் கலங்கும் சென்னை மக்கள்.. ஆளுநரே பாராட்டினாரா? ’அவர்’ அப்படி சொல்லலையே? ஆர்பி உதயகுமார் உறுதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: வடகிழக்கு பருவ மழை குறித்த அரசின் நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டவில்லை.. நம்பிக்கை உள்ளது என்று தான் கூறியுள்ளார் எனவும், நாளையே நம்பிக்கையில்லை என்று கூட ஆளுநர் கூறும் நிலை உள்ளது என கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். நேற்று ஆளுநர் சேலத்தில் பேட்டியளித்திருந்த நிலையில், உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், பல இடங்களில் தண்ணிர் தேங்கியுள்ளது. இந்நிலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

chennai rain rn ravi rb udayakumar

வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவு சாலைகளில்
வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையில் வாகன போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதை அடுத்து தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் அதிகாரிகளும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அதனை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பருவ மழையை சமாளிக்க தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு செய்து வருகிறது. மழைப் பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" என்று கூறினார்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை குறித்த அரசின் நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டவில்லை.. நம்பிக்கை உள்ளது என்று தான் கூறியுள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கடந்த 10 ஆண்டுகளில் தானே புயல், நீலம் புயல், மடிபுயல், வர்தா புயல், ஓக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் ஆகிய அனுபவங்களை நாங்கள் கையாண்டு உள்ளோம்.

தற்போது கூட சென்னை புறநகர் பகுதிகளில் 15 சென்டிமீட்டருக்கு மழைப்பொழிவு அதிகரித்து உள்ளது. இதனால் சென்னை புறநகர் பகுதியில் தண்ணீர் தத்தளிக்கிறது. இன்னும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து வருகிறது. சென்னையின் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்களை ஓட்ட முடியவில்லை. சென்னையில் வாகனங்கள் எல்லாம் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது, அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

மேம்பாலங்களில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை. காரை பாதுகாத்தாலே போதும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசு வெத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது இது மக்களை காப்பாற்ற முடியாது. தமிழக அரசை கவர்னர் பாராட்டியதாக செய்திகள் கூறுகிறது. ஆனால் கவர்னர் நம்பிக்கை உள்ளது என்று தான் கூறினாரே, தவிர எந்த செயல்பாட்டை பாராட்டினார் என்று கூறவில்லை. சில தினங்களில் கவர்னரும் நம்பிக்கை இழந்து விட்டோம் என்று கூறிவிடுவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+