மதுரை மாநாடு முடிந்த சந்தோஷம் கூட மாறலையே 8 பேர் பலி.. எடப்பாடி சோகம்.. ரூ. 6 லட்சம் நிவாரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் அதிமுக நடத்திய பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தலா ரூ.6 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

மதுரையில் நேற்றைய தினம் அதிமுக மாநாடு கோலாகலமாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். மாநாட்டு திடலை பார்வையிட்ட தொண்டர்கள் "கட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் மாநாடு நடைபெற்றதாக தெரிவித்தனர்.

AIADMK Manadu in Madurai Lakhs participated people lost their lives Many were injured

10 தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் இருந்தும் சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்றனர். அதிமுக கட்சி தொடங்கி 51வது ஆண்டை எட்டியதை நினைவூட்டும் வகையில் 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டு திடலில் காலை கொடியேற்றிய நேரத்தில் சாலைகளிலும், மாநாட்டு திடலிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

பிற்பகலுக்கு மேல் நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அலைகடலென திரண்ட கூட்டத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போக்குவரத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மாநாட்டு திடல், நான்கு வழிச்சாலை, சந்திப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டு, போக்குவரத்துகள் சீரமைக்கப்பட்டன. மாநாடு நடந்த திடல் பகுதியில் வாகன போக்குவரத்தை சீரமைப்பதில் போலீஸார் திணறினர்.

AIADMK Manadu in Madurai Lakhs participated people lost their lives Many were injured

எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி, "புரட்சித் தமிழர்" என்ற பட்டத்தை வழங்கினர். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை கட்டிக் காப்பாற்றுவார் என்று கூறி, புரட்சித் தமிழர் பட்டம் மேடையில் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிமுக நடத்திய பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற அதிமுக தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக வீர வரலாற்றின்‌. பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில்‌ மிகவும்‌ எழுச்சியுடன்‌ நடைபெற்றது. கழகத்தின்‌ சார்பில்‌ நடைபெற்ற மாநாட்டில்‌ தன்னெழுச்சியோடு கலந்து. கொள்வதற்காக, கழக நிர்வாகிகளும்‌, கழகத்‌ தொண்டர்களும்‌ வருகை தரும்போதும்‌, மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும்‌ எதிர்பாராத விதமாக, விழுப்புரம்‌ மாவட்டம்‌, வல்லம்‌ வடக்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச்‌ செயலாளரும்‌, நெகனூர்‌ வடகொல்லை கிளைக்‌ கழகச்‌ செயலாளருமான திரு. பொன்னுசாமி; திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, கந்திலி மேற்கு ஒன்றியம்‌, மண்டல நாயனகுண்டா ஊராட்சி, பத்திரிகானூர்‌ கிளைக்‌ கழகச்‌ செயலாளர்‌. திரு. சென்னையன்‌; 3. கோவை மாநகர்‌ மாவட்டம்‌, காந்திபுரம்‌ பகுதி எம்‌.ஜி.ஆர்‌. இளைஞர்‌ அணி துணைச்‌ செயலாளர்‌ திரு. 0. கதிரேசன்‌; 4. கோவை புறநகர்‌ தெற்கு மாவட்டம்‌, பெரியநெகமம்‌ பேரூராட்சி, 13-ஆவது வார்டு கழக அவைத்‌ தலைவர்‌ திரு. 5. பழனிச்சாமி; 5. கோவை புறநகர்‌ வடக்கு மாவட்டம்‌, நரசிம்மநாயக்கன்பாளையத்தைச்‌ சேர்ந்த திரு. மாரிமுத்து; 6. தென்காசி வடக்கு மாவட்டம்‌, குருவிகுளம்‌ வடக்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளர்‌ திரு. 18. வாசுதேவன்‌; 7. விருதுநகர்‌ கிழக்கு மாவட்டம்‌, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம்‌, லட்சுமியாபுரம்‌ கிளைக்‌ கழகத்தைச்‌ சேர்ந்த திரு. கடற்கரை; 8. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்‌, அன்னவாசல்‌ வடக்கு ஒன்றியக்‌ கழகச்‌ செயலாளரும்‌, ஊராட்சி ஒன்றியக்‌ குழு 10-ஆவது வார்டு உறுப்பினரும்‌, அன்னவாசல்‌ நிலவள வங்கி தலைவருமான திரு. 9. சாம்பசிவம்‌; ஆகியோர்‌ மரணமடைந்துவிட்டனர்‌ என்ற செய்தி கேட்டும் வாகனங்களில்‌ செல்லும்‌ போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில்‌ சிலர்‌ காயமடைந்துள்ளனர்‌ என்ற செய்தி கேட்டும்‌, ஆற்றொணாத்‌ துயரமும்‌, மிகுந்த மனவேதனையும்‌ அடைந்தேன்‌.

கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌, சாலைகளில்‌ பயணம்‌ செய்யும்போது, மிகுந்த பாதுகாப்புடனும்‌, எச்சரிக்கையுடனும்‌ தங்கள்‌ பயணங்களை மேற்கொள்ள வேண்டும்‌ என்று அவ்வப்போது நான்‌ வலியுறுத்தி வரும்‌ நிலையில்‌, இதுபோன்ற விரும்பத்‌ தகாத விபத்துகள்‌ நடைபெற்று, கழக உடன்பிறப்புகள்‌. உயிரிழப்பதும்‌, காயங்கள்‌ அடைவதும்‌, மேலும்‌ என்னை வேதனையில்‌ ஆழ்த்துகிறது. கழகத்தின்‌ மீதும்‌, கழகத்‌ தலைமையின்‌ மீதும்‌ மிகுந்த விசுவாசம்‌ கொண்டிருந்த. திரு. பொன்னுசாமி, திரு. சென்னையன்‌, திரு. கதிரேசன்‌, திரு. பழனிச்சாமி, திரு. மாரிமுத்து, திரு. வாகதேவன்‌, திரு. கடற்கரை மற்றும்‌ திரு. சாம்பசிவம்‌ ஆகியோரை இழந்து வாடும்‌ அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதுடன்‌, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற எல்லாம்‌ வல்ல இறைவனைப்‌ பிரார்த்திக்கிறேன்‌.

மேலும்‌, அவர்களது குடும்பத்திற்கு கழகத்தின்‌ சார்பில்‌ தலா 6 லட்சம்‌ ரூபாய்‌. வழங்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. அதே போல்‌, வாகன விபத்துகளில்‌ படுகாயமடைந்து, மருத்துவமனைகளில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின்‌ சார்பில்‌ தலா 1,50,000/- ரூபாயும்‌, காயமடைந்தவர்களுக்கு தலா 50,0001- ரூபாயும்‌ வழங்கப்படும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்வதுடன்‌, காயமடைந்தவர்கள்‌ விரைவில்‌ பூரண நலம்பெற எல்லாம்‌ வல்ல இறைவனை வேண்டுகிறேன்‌ என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+