ஆயிரம் மாடெல்லாம் அவிழ்க்கல சார்.. 700 களைகள் தான் மொத்தமே! அலங்கநல்லூரில் குமுறிய காளை ஓனர்கள்!
மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆயிரம் களைகள் அவிழ்க்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால் 700 காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டதாகவும் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்கள் காளைகளை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறுகின்றனர் காளைகளின் உரிமையாளர்கள். இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எந்த குளறுபடிகளும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 14ஆம் தேதியும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி 17 ம் தேதியும் நடந்து முடிந்தது. நேற்று புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை7.50 மணிக்கு தொடங்கியது.

போட்டியை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் ஆன் லைன் மூலம் விண்ணப்பித்த 1200 காளைகளும் 900 மாடு பிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்பதற்காக வந்த 959 காளைகளில் மருத்துவ பரிசோதனையில் 3 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மீதமுள்ள 956 காளைகள் கோவில் காளைகள் உட்பட 1000 காளைகள் களம் கண்டது. இதேபோல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் பங்கேற்க 545 வீரர்கள் வந்திருந்த நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் மது அருந்தியது, உடல் தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் வயது மூப்பு காரணமாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி உள்ளிட்ட 55 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 10 சுற்றுகள் நடத்துவதற்கு வசதியாக 490 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் நேரமின்மை காரணத்தால் 8 சுற்றுக்களோடு போட்டி நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் 400 வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர் மீதமுள்ள 100 வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் காலையிலிருந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் மாடுபிடி வீரர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்ற அஜய்,தமிழ்ச்செல்வன் உட்பட 22 பேர், மாட்டு உரிமையாளர்கள் 21பேர், பார்வையாளர்கள் கல்லூரி மாணவி உட்பட 33 பேர் என மொத்தம் 76பேர் காயமடைந்தனர்.
பலத்த காயமடைந்த 17பேர் இதில் காளை சேகரிக்கும் இடத்தில் வேடிக்கை பார்க்க வந்த தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த செல்வ முருகன், அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் பெரியசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டு போட்டியை விட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் அதிகமானோர் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்றதாக விழா குழுவினர் கூறினாலும் 700 காளைகள் மட்டுமே அவிழ்க்கப்பட்டதாகவும், நேரமின்மை எனக் கூறி நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த காளைகளை போலீசார் திருப்பி அனுப்பி விட்டதாக காளைகளின் உரிமையாளர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் அதிக அளவில் காயம் ஏற்பட போலீசாரின் கெடுபிடிகள் காரணம் எனவும் கலெக்சன் பாயிண்ட்டில் மாடுகள் முட்டியதில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஜல்லிக்கட்டில் எந்தவித குளறுபடிகளும் ஏற்படவில்லை என கூறியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியரான சங்கீதா.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் நடத்திருக்கிறது. ஆயிரம் காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவிழ்க்கப்பட்டது. வழக்கம் போல் ஒன்பது சுற்றுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் 8 சுற்றுகள் தான் நடத்த முடிந்தது. அதனால் கடைசி ரவுண்டில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு கடைசி ரவுண்டால் தான் முடியும். அதனால் அந்த சுற்றுகளை நிறுத்த வேண்டியது ஆகிவிட்டது.
ஜல்லிக்கட்டில் குளறுபடிகள் ஏற்படவில்லை. அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை. நீங்கள் ( செய்தியாளர்கள்) புதுசாக சொல்கிறீர்கள். எந்த ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படவில்லை. பாலமேட்டில் ஏழு காளைகள் அவிழ்த்தார்கள் .இங்க வந்து மூன்று காளைகள் அவிழ்த்தார்கள். நேரமானதால் தாமதம் ஆகியது வேண்டுமென்றே யாரும் தாமதம் பண்ணவில்லை" என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications