முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!
மதுரை: முத்துராமலிங்கத் தேவரை அவமானப்படுத்திய செல்லூர் ராஜுவிற்கு மதுரை மேற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கொந்தளித்துள்ளார். முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போயிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மதுரையில் தேர்தல் களம் உச்சத்தில் இருக்கிறது. இந்த முறை மதுரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் தோற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். அதிலும் மதுரை மேற்கு தொகுதியை கட்டாயம் கைப்பற்ற அமைச்சர் மூர்த்திக்கு உத்தரவிட்டுள்ளார்.

மதுரை தெற்கு தொகுதி
அதற்கேற்ப மதுரை மேற்கு தொகுதி பொறுப்பு அமைச்சர் மூர்த்தி வசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளரான எஸ்.எஸ்.ரகு பாலாஜிக்கு திமுக தரப்பில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மேற்கில் செல்லூர் ராஜு வெல்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் தவெக மாவட்டச் செயலாளரான தங்கப்பாண்டியும் கணிசமான வாக்குகளை பெறுவார் என்று தெரிகிறது.
முக்குலத்தோர் சமூக வாக்குகள்
இதனால் செல்லூர் ராஜு கொஞ்சம் கலங்கி போயிருக்கிறார். இதனால் மதுரை மேற்கில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் செல்லூர் ராஜு தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து செல்லூர் ராஜு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செல்லூர் ராஜுவின் சர்ச்சை பேச்சு
அப்போது செல்லூர் ராஜு பேசுகையில், கர்நாடகாவில் ஐபிஎல் அதிகாரியாக இருந்த போது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணாமலை. முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலை என்று தெரிவித்தார். செல்லூர் ராஜுவின் பேச்சு அங்கிருந்த அதிமுக ஆதரவு முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகள் மத்தியில் கூட அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிர்ச்சியில் அதிமுகவினர்
மதுரையில் அண்ணாமலைக்கு என்று பெரிய செல்வாக்கு கூட இல்லாத போது, பாஜகவைச் சேர்ந்த ஒருவரை செல்லூர் ராஜு முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டது அச்சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கொந்தளித்துள்ளார். மாணிக்கம் தாகூரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
செல்லூர் ராஜுவின் பேச்சு தொடர்பாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், அண்ணன் செல்லூர் ராஜுவின் நகைச்சுவை உணர்வு அளவே இல்லாமல் போனது. தேவர் அய்யா அவமதிக்கும் உங்க வார்த்தைக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மாணிக்கம் தாகூரின் பதிவு அச்சமூக மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications