பீகார் மாடலில்.. தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா? அண்ணாமலை சொன்ன பதில்!
சிவகங்கை: 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். கூட்டணி ஆட்சி குறித்து இரு கட்சிகளின் தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள் என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளில் வென்று ஆட்சியை அமைத்துள்ளது. நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ஏற்றாலும், உள்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகள் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கூட்டணி ஆட்சியில் பாஜக ஆதிக்கம் செலுத்துவதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுவதாக பிரதமர் மோடி பேசி சென்றுள்ளார்.

இதனால் தமிழ்நாட்டிலும் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேபோல் அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உட்பட பலரும் கூட்டணி ஆட்சி என்றே பேசி வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், பீகாரில் பெண்களை முன்னேற்றுவதற்காக சட்டசபைத் தேர்தலுக்கு முன் ரூ.10 ஆயிரம் நிதிஷ் குமார் கொடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வென்ற பின் ரூ.2 லட்சம் கொடுப்போம் என்று அறிவித்தார்கள். இந்த இரண்டையும் பார்த்துவிட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
கடந்த 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார் இருந்து வருகிறார். வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த தோல்வி 2026ல் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரொலிக்கும். இதனால் செல்வப்பெருந்தகை வயிற்றெரிச்சலில் இருக்கிறார். குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. அதனால் 2026ல் வரலாறு காணாத வெற்றியை என்டிஏ கூட்டணி பெறும். கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. பீகாரில் பாஜக கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கிறது. கொடுத்த வாக்கையும், மரியாதையையும் காக்க கூடிய கூட்டணி என்டிஏ கூட்டணி என்று தெரிவித்துள்ளார்.
-
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்?












Click it and Unblock the Notifications