மதுரைக்கு 1ம் தேதி பிரதமர் வருவாரு ! அவர்கிட்ட மெட்ரோ ரயில் என்னாச்சுனு கேளுங்க மக்களே! ஸ்டாலின்
மதுரை: மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் வரவில்லை என மக்கள் கேட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவின் தெற்கு மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் மாநாடு இன்று மதுரை உத்தக்குடியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றாலும் மதுரைதான், இங்கு எல்லாமே பிரபலம்தான். அப்படி பெருமைமிகு மதுரையில் 'என் வாக்குச் சாவடி, வெற்றி சாவடி' பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

சித்திரைத் திருவிழா போல கூடியிருக்கும் உங்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன். உத்தங்குடி முழுக்கவே உடன்பிறப்புகள் குடியேறிவிட்டதுபோல உணர்வு. இனி நாமதான். இனி எப்போதுமே நாமதான்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைத் தொடங்கி இந்தியாவிலேயே அதிகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்களை அதில் இணைத்தோம்.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டபோதும் யாருடைய பெயரும் நீங்கிடாத வகையில் பம்பரமாக சுழன்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். அதனால் தமிழகத்தில் எந்த வாக்காளர்களும் நீக்கப்படவில்லை.
மதுரை மாநாடு வெறும் ட்ரைலர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே கிடையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறோம்.
சமூகவலைதளமாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டாலே 2 கோடி 50 லட்சம் வாக்குகளை எளிதாக வெற்றி பெற்று விடலாம்.
இந்த தேர்தலில் 2.5 கோடிக்கு குறையாக வாக்குகளை பெற வேண்டும். அதை வாங்கிக் கொடுப்பது உங்கள் பொறுப்பு, உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு.
மகளிர் உரிமைத் தொகையை முடக்க முயன்றதை முறியடித்து, முன்கூட்டியே வழங்கினோம். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சியில் அதை ரூ.2000 ஆக உயர்த்துவோம். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழ்நாடு அரசு, மக்களிடமிருந்து எடுத்தால் அது மத்திய அரசு.
மார்ச் 1-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருகிறார். அவரிடம் மக்கள், மதுரை மெட்ரோ எங்கே? கோயம்புத்தூர் மெட்ரோ எங்கே? தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் எங்கே? கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை? நீட் விலக்கு ஏன் தரவில்லை? என்று கேள்வி எழுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசிடம் கேட்க வேண்டியதை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ஆனால் நாம் பயப்பட மாட்டோம். மிசா, தடா, எமர்ஜென்சி பார்த்த இயக்கம் திமுக. சிபிஐ, இடி, ஐடி என எதற்கும் அஞ்ச மாட்டோம். இரண்டு மாதங்களில் திமுக நடத்திய ஏழு மாநாடுகளில் ஒன்பது லட்சம் பேரை சந்தித்துள்ளேன்.
மக்களிடம் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்று கேளுங்கள், இந்தப் போரில் தமிழ்நாடு வெல்லும். ஒன்றாக இந்தி திணிப்பை வெல்வோம், மாநில சுயாட்சியை மீட்டெடுத்து, மக்கள் நலத்திட்டங்களை தொடரச் செய்வோம். உங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக இருக்க வேண்டும் என்றார்.
-
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பிச்சை எடுத்த காசில்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.6 கோடி வழங்கிய.. மதுரை யாசகர்! சுவாரசிய தகவல் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications