அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் மீது தாக்குதல் முயற்சி? உடன் வந்தவர்கள் காயம்! மதுரையில் என்ன நடந்தது
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருடன் சென்றவர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். டிடிவி தினகரனின் அமமுகவினர் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ஆர்பி உதயகுமார் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்று இருந்தனர். பின்பு கூட்டம் முடிந்த பின்பு திரும்பியுள்ளனர். ஆர்பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருமங்கலம் வழியாக கார்களில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது உசிலம்பட்டி அருகே திடீரென சிலர் வாகனங்களை வழிமறித்துள்ளனர். பின்னர் கார்கள் மற்றும் அதில் இருந்துவர்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 கார்கள் சேதமடைந்தன. மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர்.
வழிமறித்து நடத்திய தாக்குதலில் மதுரை இளைஞர் பாசறை இணை செயலாளர் தினேஷ்குமார், அபினேஷ், விஷ்ணு உள்ளிட்ட 3 படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில், டிடிவி தினகரனின் அமமுகவினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஆர்பி உதயகுமார் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனை ஆர் பி உதயகுமார் தவறாக பேசியதாகவும், இதன் காரணமாகவே அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய தொடங்கியுள்ளனர். மதுரையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சினிமா போல ஒரே நாளில் நாட்டை மாற்ற முடியாது.. நடிகர் விஜய் குறித்து மதுரையில் வையாபுரி பேட்டி












Click it and Unblock the Notifications