அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை அடக்கிய கார்த்திக்.. கார் பரிசளித்த அமைச்சர்கள்
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளர் கார்த்திக்கிற்கும் கார் பரிசளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. 10 சுற்றுகளாக நடந்த இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததது.

சுற்றுக்கு தலா 25 வீரர்கள் வீதம் 250 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த இந்தப்போட்டியில் வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர். பல காளைகள் தொட்டுப்பார் என்று முட்டி தள்ளி விட்டு பிடிபடாமல் ஓடின.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ஆகியோர் கார் சாவியை பரிசளித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக் இந்த ஆண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார்.
தொட்டுப்பார் என்று சொல்லி களத்தில் நின்று விளையாடிய கார்த்தி என்பவரின் காளை முதலிடம் பிடித்தது. காளையின் உரிமையாளர் கார்த்திக் என்பவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயமடைந்தனர். 20 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மாட்டுப்பொங்கல் பண்டிகை தினமான நாளைய தினம் பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதே போல வரும் 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications