சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. விஜய்யின் அரசியல் குறித்து அண்ணாமலை பரபரப்பு கருத்து கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, "விஜய் தனிக்கட்சி தொடங்கி அவரின் கட்சிக்காக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவருக்கு வாக்களிக்க விரும்பும் மக்கள் வாக்களிக்கட்டும். சித்தாந்த அடிப்படையில் நீண்ட காலமாக சில கட்சிகள் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள், யாரையும் நான் குறைவாக எடைபோடவில்லை. அவரவர் அவர்களின் சக்திக்கு ஏற்ப பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு
நாங்கள் எங்களின் சக்தியை நம்புகிறோம். திமுக வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி வேண்டும் என்று தான் சொல்வார்கள். இதுதான் கள நிலவரம். அந்த அரசியலை தான் நான் சொல்கிறேன். தேர்தல் ஆணையம் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஒரு கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய கடமை காவல்துறைக்கு மட்டுமே இல்லை. அதேநேரத்தில் விஜய்யின் பாதுகாப்பும் முக்கியமானது. சைக்கிளில் வந்தார். மாலை போட்டிருந்தார். யாரோ மாலையை போட்டு இழுத்தபோது விழுந்தார். எல்லாவற்றையும் நாம் பார்த்தோம். மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
பேச வேண்டும்
எல்லா இடங்களிலும் நம்முடைய கருத்தை சொல்ல வேண்டும். இவ்வளவு தூரம் காரைக்குடியில் அவர் ரோட்ஷோ சென்றும் அவரால் பேச முடியவில்லை. 7 நிமிடம் தாமதமாக வந்ததால் பேசவில்லை என்கிறார்கள். எங்களுக்கு அதில் உடன்பாடில்லை. என்ன இருந்தாலும் பேசுவது முக்கியம். பேசுவதற்கு அனுமதியும் கொடுக்க வேண்டும்.
பேசினால் தான் மக்களுக்கு தெரியும். எல்லோரும் சூடாக பிரச்சாரம் செய்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். களம் எங்களை நோக்கி நகர்கிறது. எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை. எல்லா இளைஞர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இந்தமுறை இளைஞர்கள் தீர்மானிக்க கூடியது தான் முடிவு. இளைஞர்கள் கையில் உலகம் உள்ளது.
ஜனநாயகன் படம் விவகாரம்
ஜனநாயகன் படத்தில் பலரின் உழைப்பு உள்ளது. எனக்கே சிலர் மெசேஜ் அனுப்பி லீக் ஆகிவிட்டது என்றனர். 3 நிமிடம் பார்த்தேன் என எனக்கு மெசேஜ் அனுப்ப கூடாது. பார்க்க கூடாது என்றேன். தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும். நமக்கு வேறு வேலை இல்லையா. முறையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு செல்ல வேண்டியது சென்று சேர வேண்டும்" என்றார்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!











Click it and Unblock the Notifications