மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாடு வியக்கும் மதுரை சித்திரை திருவிழா, சனாதனத்தின் விழா எனவும் தான் ஒரு சனாதனி எனவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள நதிக்கரை நாகரிகங்களில் முக்கியமானதாக வைகை நதி நாகரிகம் இருக்கிறது என ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வுகள் கூறி வருகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நதிக்கு மேலும் சிறப்பூட்டுவதாக சித்திரை திருவிழா அமைந்திருக்கிறது. இந்த சித்திரை திருவிழாவை அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் இந்த திருவிழாவில் பங்கெடுத்து வருகின்றனர்.

BJP state general secretary Rama Srinivasan said Chithirai festival is a Sanatana festival

இந்நிலையில் இந்த திருவிழா ஒரு சனாதன விழா என பாஜகவின் ராம ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார். மதுரையில் பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்

அவர் மேலும் பேசியதாவது, "மதுரையில் பாஜக ஓட்டுக்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மதுரையில் அது குறித்த அறிக்கை வெளியிடப்படும்.

'வளங்கள் மறு பகிர்வு' என்ற பெயரில் மத ரீதியான சாதி ரீதியான போக்கை காங்கிரஸ் கட்சியினர் பேசியும், சொல்லியும் வருகின்றனர். ராஜஸ்தானில் பிரதமர் பேசியதை சர்ச்சைக்குரியதாக மாற்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி முயல்கிறது. பிரதமர் சரியாக பேசி வருகிறார். சரியான நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை உண்மையை வெளிப்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் யார் பணத்தை யாரிடம் இருந்து எடுத்துக் கொடுக்க போகிறார்கள் என தெரியவில்லை. யார் நிலத்தை எடுத்து யாரிடம் கொடுக்க போகிறார்கள்? யார் செல்வத்தை வாங்கி யாரிடம் கொடுக்க போகிறார்கள்? என சொல்லவில்லை.

இந்திய இறையாண்மையில் முஸ்லீம்களுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். காங்கிரசின் பேச்சுக்களால் நாடு பிரிவினை வாதத்தை நோக்கி செல்லும் நிலை உள்ளது. ஜின்னா பேசிய வார்த்தைகளை காங்கிரசும் ராகுலும் வேறு வேறாக பேசி வருகின்றனர்.

தேர்தலுக்காக இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்கு வாங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள். பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் எனும் வார்த்தையை பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் பேச்சுக்களில் சிறுபான்மையினர் எனும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்களை மட்டுமே மோடி குறிப்பிட்டு பேசினார்.

சித்திரைத் திருவிழா சனாதன விழா. இந்து மதம் சனாதனம், நான் சனாதனி. சனாதனம் தான் சித்திரைத் திருவிழா. கருப்பசாமி, மொட்டை அடிப்பது, அழகரை தூக்கி செல்வது, அவரை பார்க்க இலட்சக்கணக்கானோர் வருவது எல்லாமே சானதனம். சானதனம் தான் சித்திரை திருவிழா, சித்திரை திருவிழாதான் சனாதனம். மீனாட்சி கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் சானதனம்" என்று கூறியுள்ளார். இவரது கருத்துக்கள் கடும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+