மதுரை வில்லாபுரத்தில் பயங்கரம்.. போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை
மதுரை: மதுரை வில்லாபுரத்தில் வீட்டில் குடிநீர் போர்வெல் வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கணக்குப்பிள்ளை தெருவில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் போர் போடுவதற்காக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா முக்குடி பகுதியில் இருந்து பாரதி, நாராயணன், வீரகுமார் ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பத்தரை மணி அளவில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் குணசேகரன் வீட்டில் நுழைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாரதி (வயது 25) என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையாளர் பழனிகுமார் காவல் உதவி ஆணையாளர் திருமலைக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கொலை செய்து தப்பியோடிய கொலை குற்றவாளிகள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பாரதி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. முன்விரேதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications