எனக்கு பயமா இருக்கு... அம்மா, அப்பா ஐயம் சாரி... மனதை உலுக்கும் ஜோதி ஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ!
இது நான் எடுத்த முடிவுதான். எனக்கு ரொம்ப ஹேப்பியான ஃபேமிலி கிடைச்சிருக்கு.
மதுரை: எல்லோரும் என்மேல ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தீங்க என்னாலதான் அதை நிறைவேற்ற முடியலை. இதுல யார் தப்பும் இல்லை. எனக்கு ரொம்ப நல்ல பேமிலி கிடைச்சிருக்கு என்னாலதான் அதை பாதுகாக்க முடியலை என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கண்ணீர் மல்க பேசியுள்ளார் மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா.
Recommended Video
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமா என்ற அச்சத்தின் காரணமாக மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் அவர், தற்கொலை முடிவை தானாகவே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் குறை கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இரண்டு ஆடியோக்களாக வெளியிட்டுள்ள மாணவி ஜோதி, எல்லாருமே என்கிட்ட ரொம்ப எக்ஸ்பர்ட் பண்ணீங்க, எனக்குத்தான் பயமா இருக்கு. ப்ளீஸ் என்னை ப்ளேம் பண்ணாதீங்க, இது நான் எடுத்த முடிவுதான்.எனக்கு ரொம்ப ஹேப்பியான ஃபேமிலி கிடைச்சிருக்கு. எனக்குத்தான் அத பாதுகாக்க தெரியல. பை அம்மா.. ஐ அம் கோயிங் டூ மிஸ் யு மாம் சாரி என்று ஆடியோவில் கூறியுள்ளார்.
அப்பா யாரையும் பிளேம் பண்ணாதீங்க இது யாரோட தப்பும் இல்லை நான் நல்லாதான் படிச்சேன். ஆனா பயமா இருக்கு. ஒருவேளை சீட் கிடைக்கலன்னா நான் மட்டும் இல்லை நீங்க எல்லோரும் ஏமாந்து போயிருவீங்க. ஐயம் சாரி அப்பா... ஐயம் சாரி அம்மா டாடா...
என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க. ஸ்ரீதர் இருக்கான் நல்லா பாத்துக்குவான். தம்பியை நல்லா படிக்க வையுங்க பாய் ஸ்ரீதர். ஐயம் சாரி. உங்களை எல்லோரையும் விட்டுட்டு போறேன் உங்க ஹெல்தை நல்லா பாத்துக்கங்க ஐயம் சாரி என்று கூறியுள்ளார் ஜோதி ஸ்ரீ துர்கா.
ஒருவேளை நீட் தேர்வில் தோல்வி அடைந்து தனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம் காரணமாக இந்த முடிவை தான் எடுத்ததாக ஜோதிஸ்ரீ கூறியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கண்ணீருடன் உருக்கமாக பேசிய ஆடியோவை கேட்கும் அனைவருக்கும் நீட் தேர்வு என்னும் அரக்கன் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
நீட் தேர்வு ரத்தால் மன உளைச்சல்.. கோவை 19 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை -
நீட் வினாத்தாளுடன் தூத்துக்குடி சென்ற வாகனம்.. நடு வழியில் நின்றதால் பரபரப்பு.. இரவில் நடந்தது என்ன? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications