மதுரை அதிமுக மாநாடுக்கு தடை இல்லை .. ஏன் தெரியுமா? உயர்நீதிமன்றம் சொன்ன பரபரப்பு காரணம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதனால் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற எந்த சிக்கலும் இனி இல்லை.

ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை எந்த ஒரு மாநாடும் நடைபெறவில்லை.

case seeking a ban on the Madurai AIADMK convention will be heard in madras HC madurai bench today

இதனிடையே திருச்சியில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை அழைத்து மாநாடு நடத்தினார். இந்நிலையில் கொங்குமண்டலத்தை தாண்டி மதுரையிலும் பெரும் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் என அறிவித்தார். வரும் 20ம் தேதி மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

ஏனெனில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் என்பதால், முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களின் முக்கிய நகரமான மதுரையில் தனது செல்வாக்கை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி இந்த மாநாட்டை அறிவித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. மதுரை மாநாட்டுக்கு செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா,உதயகுமார் ஆகியோர் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.லட்சக்கணக்கானோர் திரள்வாரகள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவல்துறையில் அதிமுக அனுமதியும் வாங்கிவிட்டது.

இந்நிலையில் மதுரை அதிமுக மாநாடு நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு முக்கிய காரணம் என்பது மதுரையில் 20ம் தேதி நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடைக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‛‛மதுரை விமான நிலையம் அமைந்துள்ள பெருங்குடி பகுதியில் வரும் 20ம் தேதி அதிமுக மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த இடம் விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தினமும் ஏராளமான விமானங்கள் இங்கு வந்து செல்கின்றன. இந்த பகுதியில் விமானங்கள் மிகவும் தாழ்வாகவே பறந்து செல்கின்றன. ஆனால் விமான நிலைய அதிகாரிகளிடம் தடையின்மை சான்று பெறவில்லை.

இந்த மாநாட்டுக்கு 15 லட்சம் பேர் கூட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பட்டாசு வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பட்டாசு வெடிக்க தடைப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் இந்த மாநாடு நடக்கிறது. பொதுவாக விமான நிலையத்தை சுற்றி 20 கிலோமீட்டர் தொலைவுக்கு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் விளம்பர பலகை கூட வைக்க முடியாது. இத்தகைய சூழலில் மாநாடு ஏற்பாடு நடக்கிறது. மேலும் இந்த மாநாட்டால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மாநாடு நடத்த அனுமதிக்க கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிமுக மாநாடுக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.4 மாதத்துக்கு முன்பு மாநாட்டுககு அறிவிப்பு செய்த நிலையில் கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு தர முடியும் என்று கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதனால் மதுரை அதிமுக மாநாடுக்கு எந்த தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+