தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரிப்பு.. எவிடென்ஸ் கதிர் திடுக்
மதுரை: தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டியில் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்வோர்களை வழக்குகளில் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் சார்பில் கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் தலித் பெண்கள் மற்றும் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற சாதி ரீதியான வன்கொடுமை, சாதிய படுகொலை, பாலியல் சித்திரவதை மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் உள்ளிட்ட 90 வழக்குகளை ஆய்வு செய்து ஆய்வறிக்கை முடிவினை எவிடன்ஸ் செயல் இயக்குனர் கதிர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் கூறுகையில், "90 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே நீதிமன்ற தீர்ப்பு கூறப்பட்டுள்ளது, பல வழக்குகள் நீதிமன்றம் விசாரணைக்கு வரவில்லை, புகார்கள் கொடுத்து விட்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அரசு இயந்திரத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர், காவல்துறை காலதாமதம் செய்வதால் வழக்குகளில் கட்டப்பஞ்சாய்த்து செய்யப்படுகிறது, பாதிக்கப்பட்ட மக்களிடம் பணம் வாங்கி தருகிறோம், வழக்கை வாபஸ் பெறுங்கள் என காவல்துறை விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்வோர்களை வழக்குகளில் சேர்த்து கைது செய்ய வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியே வருகிறது.
எஸ்.சி/எஸ்.டி ஆணைய கூட்டத்தை நடத்த வேண்டும், தமிழகத்தில் 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது, வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 இலட்சம் நிதியுதவி, அரசு வேலை வழங்க வேண்டும், நீதிமன்றங்களில் வன்கொடுமை வழக்குகள் தேங்கி நிற்கிறது, தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஒரு வழக்கில் குற்றவாளி ஜாமீன் கிடைப்பதற்க்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை 13 வயதுக்கு பதில் 14 என பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்க்காக காவல்துறை குற்றவாளியிடம் பணம் பெறப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிக்கு முன் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கமிட்டி வலுவிழந்து உள்ளது, மாவட்ட எஸ்.சி/எஸ்.டி கமிட்டியின் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியரே கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதில்லை, ஆய்வறிக்கை முடிவுகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்" இவ்வாறு கூறினார்.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி











Click it and Unblock the Notifications