மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியது சிபிஐ!
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் காலம் கோரப்பட்டது. டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவர் நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்ற பெண் அளித்த புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது கடந்த ஜூன் 28 ஆம் தேதி அடித்தே கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் 5 தனிப்படை காவலர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள், யாருடைய உத்தரவின் பேரில் அஜித் குமாரை விசாரணை செய்தீர்கள்? அஜித் குமாரை அடித்து துன்புறுத்தியது ஏன்? காயமடைந்த அஜித் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாதது ஏன்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமாரின் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன், கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அஜித் குமார் மீது நகை திருட்டுப் புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில், வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் மரணித்ததாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருடிய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் தனிப்படை காவலர்கள் 5 பேர் உயிர் போகும் எனத் தெரிந்தே அடித்ததாக எப்.ஐ.ஆரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர, மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் ஆய்வு அறிக்கையை சிபிஐக்கு வழங்க ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications