தர்கா இருக்கு.. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை இன்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு மற்றும் கோயில் நிர்வாகங்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடாகும். இந்த மலை மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. அதேபோல் மலையின் மீது தீபத்தூண் உள்ளது. இந்நிலையில் தான் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அனுமதி வழங்கினார். ஆனால் போலீசார் நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்று அனுமதி மறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதி உத்தரவின் பேரில் சிஐஎஸ்எப் எனும் மத்திய படைவீரர்கள் அங்கு வந்தனர். அவர்களை மலைக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களை செய்தனர். இந்த வழக்கு கடந்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் டிசம்பர் 5ம் தேதி விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பிலும் வழக்கின் நிலவரத்தைக் நீதிபதிகள் கேட்டனர். அதோடு வழக்கை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்க தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விரும்புவதால் தங்களுக்கு காலஅவகாசம் வேண்டும் எனறு தமிழக அரசு கூறியது. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு வாதத்தை தொடங்கியது. அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அட்வகேட் ஜெனரல் ராமன் ஆஜராகினர். அவர்கள், ‛‛திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடம் அருகே தர்கா உள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும். ஏனென்றால் தனிநபகரின் கோரிக்கை அடிப்படையில் கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியாது’’ என்ற வாதத்தை முன்வைத்தனர்.
மேலும் அட்வகேட் ஜெனரல் ராமன் ''இது ஒன்றும் பொது நல வழக்கு கிடையாது. மலையின் மீது குறிப்பிட்ட இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பது பற்றி அடிப்படை கேள்வி எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்துாண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்'' என்றார்.
மேலும் பிரிவி கவுன்சில் தீர்ப்பு உட்பட இது தொடர்பான வெவ்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அட்வகேட் ஜெனரல் வாதங்களை முன் வைத்தார். தொடர்ந்து கோயில் நிர்வாகம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அத்தனை வாதங்களை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications