முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா! மொத்தமாய் திரளும் அரசியல் தலைவர்கள்! பலத்த பாதுகாப்பு
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நாளை பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. முன்னதாக மதுரையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு மரியாதை செலுத்த இருக்கும் நிலையில், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இதற்காக மாநகர காவல் துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மதுரையில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி மற்றும் 63 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை காலை 8 மணி அளவில் கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி
இதனைத் தொடர்ந்து முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் பொதுமக்கள் என அனைவரும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர். தேவர் சமுதாய அமைப்புகளின் சார்பில் முளைப்பாரி பால்குடம் காவடி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. தேவரின் சிலைக்கு பால் அபிஷேகமும் செய்யப்படுகிறது. இதனை ஒட்டி தேவர் சிலைக்கு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் தற்போது பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற காரணத்தால், ஜெயந்தி விழாவை முன்னிட்டு தற்காலிகமாக அப்பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை பாதுகாப்பு
மேலும் முக்கிய பிரமுகர்கள் பலர் மரியாதை செலுத்த வருகின்ற காரணத்தால் கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் மூலமாக கண்காணிக்கப்படுகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை நடவடிக்கை
மதுரையில் இருந்து பசும்பொன் செல்லும் வழியில் உள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், கமுதி உள்ளிட்ட பகுதிகளிலும் ராமநாதபுர,ம் சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பிட்ட சில முக்கியமான இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இன்றும் நாளையும் சில குறிப்பிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் நாளை மதுரை விமான நிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன் சென்று அங்கு தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். முன்னதாக இன்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் செய்கிறார். நாளை காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு 8.30 மணியளவில் மாலை அணிவித்து விட்டு, பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடம் செல்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications