Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதனம் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின்.. வாயை விட்ட அமித் மாளவியா! நீதிபதி செஞ்சது தவறு - சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சனாதன ஒழிப்பு விவகாரத்தில், பாஜகவின் அமித் மாளவியா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்திருந்தது. இந்த ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி கூறியுள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாக இல்லை" என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பாஜக தலைவர் அமித் மாளவியாவின் வன்முறை தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Sanatana Dharma Madras High Court CPIM

வழக்குப்பதிவு ஏன்?

'சனாதன ஒழிப்பு' பற்றி தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேசியது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாளவியா, 80 சதவிகிதமான மக்களை இனப் படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா? என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர காவல் துறையால் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆபத்தான விளக்கம்

அந்த FIR-ஐ ரத்து செய்துள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி அத்தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள், நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங்களை உள்வாங்கியதாகவோ, அரசியல் சாசனத்தின் விழுமியங்களுக்கு உட்பட்டதாகவோ இல்லையென்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார்.

சனாதன தர்மம்

"முழு வழக்கும் 'ஒழிப்பு' (ozhippu) என்ற சொல்லைச் சுற்றியே அமைகிறது; அந்தச் சொல் மிகவும் முக்கியமானது. 'அழித்தல்' (abolish) என்ற சொல், ஏற்கனவே உள்ள ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கிறது. இதை தற்போதைய வழக்கிற்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும்.

பண்பாட்டு அழிப்பு

சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் 'இனப்படுகொலை' (genocide) ஆகும். சனாதன தர்மம் ஒரு மதமாக இருந்தால், அது 'மதப்படுகொலை' (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு முறைகள் மற்றும் தாக்குதல்களின் மூலம் மக்களை ஒழிப்பதையும் இது குறிக்கிறது. எனவே, 'சனாதன ஒழிப்பு' என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே 'இனப்படுகொலை' அல்லது 'பண்பாட்டு அழிப்பு' என்பதையே குறிக்கும்.

பிற்போக்கு சித்தாந்தம்

இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடியாது" என்ற நீதிபதியின் மேற்கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்தமானது. ஒரு பிற்போக்கு சித்தாந்தத்தை, மக்களை சாதிகளாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தியலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை ஒழிப்பது என்பது, எப்படி அதைப்

ஒழிப்பு என்றால் என்ன?

பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும் ? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "சாதி ஒழிப்பு" பேசினார். அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனிதர் இழிவுப்படுத்துகிற. பாகுபடுத்துகிற. வேறுபடுத்துகிற சாதி என்கிற கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுதானே. ஒழிப்பு என்பதாலேயே படுகொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவதெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச்சர்களே இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவது குற்றம் என்றாகிவிடும்.

சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம்

இப்படிக் கூறிய நீதிபதி "80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய சொல்கிறீர்களா?" என்று அமித் மாளவியா கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும் தூண்டவில்லை என்றெல்லாம் விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது. சனாதன தர்மத்திற்கும் நால்வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருதுபவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக் கூடாதா? "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிரகடனம் இல்லையா?

சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டம்

சனாதனம் என்றால் நித்தியமானது, அழிவற்றது என்று கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத்தியலை எதிர்த்த போராட்டத்தின் விளைவு தானே.

ஆகவே, இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின் கருத்துக்கள் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு. திரும்பப் பெறப்பட தேவையான நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+