தமிழக அரசு செயல்பாடுகள் சிறப்பு.. மு.க.அழகிரி அளித்த பதில்.. பிடிஆர் ஆதரவாளர்களுடன் திடீர் சந்திப்பு
மதுரை: தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள் கிராமத் தலைவர்கள், பொதுமக்களுடன் அப்போது மத்திய அமைச்சராக இருந்த மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் வழங்குவதாக, அதிமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அதையடுத்து, மேலூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து வீடியோ கேமராமேனுடன் கோயிலுக்குள் சென்றுள்ளனர். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

21 பேர் மீது வழக்கு
பின்னர் மு.க.அழகிரியுடன் இருந்த திமுகவினர் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக வட்டாட்சியர் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகரின் பேரில் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மு.க.அழகிரி ஆஜர்
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி லீலா பானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்பட 20 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தடுமாற்றம்
பின்னர் விசாரணையை ஜன. 6-க்கு நீதிபதி லீலா பானு ஒத்தி வைத்தார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மு.க.அழகிரி வெளியே வந்தார். அப்போது, படிக்கட்டியில் இறங்கியபோது அழகிரி தடுபின்னர் விசாரணையை ஜன. 6-க்கு நீதிபதி லீலா பானு ஒத்தி வைத்தார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மு.க.அழகிரி வெளியே வந்தார். அப்போது, படிக்கட்டில் இறங்கியபோது அழகிரி தடுமாறி கீழே விழ முயன்றார். அப்போது, உடன் வந்த திமுகவினர் அவரது கையை பிடித்து கீழே விழாமல் காப்பாற்றினர். மாறி கீழே விழ முயன்றார். அப்போது, உடன் வந்த திமுகவினர் அவரது கையை பிடித்து கீழே விழாமல் காப்பாற்றினர்.

திமுக ஆட்சி
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க.அழகிரியை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான மிசா.பாண்டியன் மற்றும் திமுகவினர் சந்தித்து பேசினர். அப்போது மு.க.அழகிரியிடம் திமுக அரசின் செயல்பாடு எப்படியிருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று பதிலளித்தார்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது











Click it and Unblock the Notifications