சுறுசுறுப்பு சு.வெங்கடேசன்! மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மக்களவைத் தொகுதி?
மதுரை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்க வாய்ப்பு.
மதுரை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவை தொகுதியை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே திமுக ஒதுக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் சுறுசுறுப்பான உழைப்பும் அவரது ஆக்கப்பூர்வமான பணிகளுமே ஆகும்.
தொகுதி மக்கள் மத்தியில் பெரியளவில் சு.வெங்கடேசன் அதிருப்தியை சம்பாதிக்காததால் மீண்டும் அவரையே வேட்பாளராக முன்னிறுத்தும் பட்சத்தில் திமுக கூட்டணியில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்படக்கூடும்.

2024 நாடாளுமன்ற தேர்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஓராண்டு மட்டுமே இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள், அவர்களின் தொகுதிப் பணிகள் குறித்தெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அலசி ஆராய்ந்து வருகிறார். அந்த வகையில் மதுரை மக்களவை உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் குறித்த ரிப்போர்ட் பாசிட்டிவாக உள்ளது. விண்ணப்பங்களில் தமிழ் மறுப்பு உள்ளிட்ட யாரும் கண்டுபிடிக்காத முடியாத நுண் விவகாரங்களை கூட பெரிதுபடுத்தி மத்திய அரசை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார் சு.வெங்கடேசன்.

சுறுசுறுப்பாக பணி
இதுமட்டுமல்லாமல் தனது தொகுதி சார்ந்த பணிகளையும் மிகுந்த ஆர்வமுடன் செய்து வருகிறார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தனது தொகுதியை சார்ந்தவர்கள் தன்னை எப்போது வேண்டுமானால் சந்திக்கலாம் என்பதை அறிவிப்போடு மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாக அதை செயல்படுத்தியும் வருகிறார். இதனால் மதுரை மக்கள் மத்தியில் எளிமையானவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

பாசிட்டிவ் ரிப்போர்ட்
இதுமட்டுமல்ல இவரை பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு உரிய எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பவர். இப்படியாக இவர் குறித்த பாசிட்டிவ்கள் அதிகம் இருப்பதாலும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் நேரடி அறிமுகம் இருப்பவர் என்பதாலும் சு.வெங்கடேசன் மீது நல்ல அபிப்பிராயம் உள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது மீண்டும் சு.வெங்கடேசனை மதுரை தொகுதியில் மீண்டும் களமிறக்கும்பட்சத்தில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வசம் மதுரை ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை மக்களவைத் தொகுதி
சு.வெங்கடேசன் குறித்த கூடுதல் சிறப்பு என்னவென்றால், எதற்காகவும் யாரிடமும் அவர் எதையும் எதிர்பார்க்காதவர். இதனிடையே மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினர் அமைச்சர் மூர்த்தியை நச்சரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications