திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா எப்போது தொடங்குகிறது தெரியுமா?
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அக்டோபர் 22 ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா தீபாவளி மறுநாள் தொடங்கவில்லை. முக்கியத் திருவிழாவான வேல் வாங்குதல் நிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம். இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து முருகனை ஏராளமானோர் வழிபட்டுச் செல்கின்றனர். திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாப்படும் முக்கிய திருவிழா கந்த சஷ்டி திருவிழா. இத்திருவிழாவானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளிக்கு அடுத்த நாள் தொடங்கி, 7 நாட்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

கந்தசஷ்டி திருவிழா கடந்த காலங்களில் பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாள் தொடங்கியதால், தீபாவளி தினத்தன்று மதியம் முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து போட்டிபோட்டு இடம்பிடிப்பது வழக்கம். இதனால், திருப்பரங்குன்றம் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் கந்தசஷ்டி தொடங்கவில்லை. அதற்கு அடுத்த நாளே தொடங்கப்பட்டது.
இந்நிலையில், வரும் அக்டோபர் 20 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு மறுநாள் அல்லாமல், ஒருநாள் கழித்து அக்டோபர் 22 ஆம் தேதி (புதன்கிழமை) கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது. காப்புக் கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கவுள்ளது.
இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் தீபாவளியன்றே இடம் பிடிக்க வேண்டும் என்பதால் பண்டிகையைக் கொண்டாட இயலாத சூழல் ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குவதால் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு பக்தர்கள் வர ஏதுவாக இருக்கும்.
திருப்பரங்குன்றத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி திருவிழாவானது 28 ஆம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் நிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார லீலை அக்டோபர் 27 ஆம் தேதி, திங்கள்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அக்டோபர் 28 ஆம் தேதி காலை சட்டத் தேர் பவனி, மாலையில் பாவாடை தரிசனம், மூலவருக்கு தங்க கவசம் அணிவிப்பு நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications