"டச் பண்ணாதீங்க".. புத்தி தடுமாறிய நாகமலை வசந்தி.. ரோட்டில் "அசிங்கப்பட்டு"..இப்ப மொத்தமா போயிடுச்சே
மதுரை: மாஜி பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி மீதான துறை ரீதியான விசாரணைகள் நடந்து வரும்நிலையில், பணியில் இருந்து நிரந்தரமாக அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? யார் இந்த வசந்தி???
நாகமலை வசந்தி என்றால் ரொம்ப ஃபேமஸ்.. நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர்.. ஆரம்பத்தில் சின்சியராகத்தான் வேலை பார்த்து வந்தார்...

திடீரென பணத்தின் மீது மோகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அட்ராசிட்டியில் இறங்கிவிட்டார்.. சின்ன சின்ன குற்றங்களில் ஆரம்பித்து, வழிப்பறி, கொலை மிரட்டல் வரை வந்துவிட்டார்..
யார் இந்த வசந்தி: அப்பாவிகள் யாராவது சாலையில் பணம் கொண்டு போனால், அவர்களை வழிமறித்து, விசாரணை என்ற பெயரில் பணத்தை பறித்து வந்துள்ளார்.. பாதிக்கப்பட்டவர்கள் பயந்துகொண்டு, புகார் தருவதில்லை.. அதனால் வசந்தியும் எஸ்கேப் ஆகி வந்தார்.. கடந்த 2021-ல் அர்ஷத் என்பவர் மூலம் தான் வசந்திக்கு சிக்கல் வந்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் இந்த அர்ஷத்.. கைப்பை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். தனியாக தொழில் தொடங்க ஆசைப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள பாண்டி என்ற நண்பரிடம் கடன் கேட்டுள்ளார்..
அதற்கு பாண்டி, 10 லட்சம் ரூபாய் எடுத்து வா, அதை, இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி வரவழைத்துள்ளார்.. இது தெரியாமல் அர்ஷத், ஒரு பையில் 10 லட்சம் வைத்துக்கொண்டு, நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார்.. அதற்குள் பாண்டி, வசந்திக்கு போனை போட்டு, 10 லட்சத்துடன் அர்ஷத் என்பவர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லவும், வசந்தியும், ஸ்பாட்டுக்கு வந்து, அர்ஷத்தை மடக்கிவிட்டார்.. விசாரிக்க வேண்டும் என்று சொல்லி ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, ரூ.10 லட்சத்தையும் பறித்துக்கொண்டு, அர்ஷத்தை கீழே இறக்கிவிட்டாராம் வசந்தி..

ஸ்கூல் நோட்புக்: இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஷத், தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார்.. அதற்கு வசந்தி "பணமா? எங்கே இருந்தது? என் பிள்ளை சத்தியமா உன்கிட்ட இருந்த பையில் ஸ்கூல் நோட்டு புக்தான் இருந்தது... பணமே இல்லையே.. இப்படியே நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்" என்று மிரட்டி உள்ளார்.. இதனால் செய்வதறியாது விழித்த அர்ஷத் மாவட்ட எஸ்பி வரை புகார் கொண்டுபோனார்.. எஸ்பி உத்தரவிட்டதன் பேரில், இந்த வழக்கை போலீசார் துரிதமோக கையிலெடுத்தனர்.. இதற்காகவே தனி டீம் களமிறக்கப்பட்டது.. உடனடியாக வசந்தியை சஸ்பெண்ட் செய்தனர்.,
ஆனால், அதற்குள் வசந்தி எஸ்கேப் ஆகிவிட்டார்.. பல்வேறு தேடுதல் முயற்சிகளுக்கு பிறகு, வசந்தி கைதானார்.. பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டார். இந்நிலையில், வசந்தி தன்னுடைய வழக்கு தொடர்பான சாட்சிகளை மிரட்டியதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இது தொடர்பாக மிரட்டுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கவும், அதன்பேரில் அவர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. தென் மண்டல ஐஜி அஸ்ராக கார்க் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கை அவரை கைது செய்ய திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

வசந்தி டிஸ்மிஸ்: துரை ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் வசந்தியை தேடி 10 நாட்களுக்கு முன்பு போலீசார் சென்றனர்.. காரில் சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து, கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், வசந்தி இறங்க மாட்டேன் எனக்கூறி காரிலேயே பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார்.. பிறகு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.. அதற்குள் பெண் போலீஸ் அதிகாரிகள், குண்டுகட்டாக ஓடிவந்து வசந்தியை தூக்கியும், தரதரவென இழுத்துச்சென்றும் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். வசந்தி செய்த அட்டகாசத்தினால், அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது..
வசந்தியிடம் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், பணம் பறிப்பு வழக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி இந்திய அரசமைப்புச் சட்டம்-311 பிரிவின்படி காவல்துறை பணியில் இருந்து டிஸ்மிஸ் (நிரந்தர நீக்கம்) செய்யப்பட்டு உள்ளார்... இதற்கான உத்தரவை மதுரை சரக போலீஸ் டிஐஜி பொன்னி பிறப்பித்திருக்கிறார்.. பணம் பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications