நீங்க வாடகை வீட்டில் குடியிருக்கீங்களா? வீட்டின் உரிமையாளரா? ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவை பாருங்க
மதுரை: வாடகைதாரர் வீட்டு உரிமையாளர் இடையேயான உரிமையியல் பிரச்சனையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை துணை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் இடையே உரிமையியல் பிரச்சனை ஏற்படும் போது அதில் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் ஆங்காங்கே உருவாகும். பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மோசடி, மிரட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு காவல்துறையை அணுகி நிவாரணம் பெற முடியும். ஆனால் அதேநேரம் எந்த உரிமையியல் பிரச்சனையிலும் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக மதுரையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த எஸ்.வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.
எஸ்.வெங்கட்ராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், நான் மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 5வது தெருவில், சுப்பிரமணியன் தாயார் பிரேமாவதி என்பவர் வீட்டில் வாடகைக்குக்கு வசித்து வருகிறேன். வாடகை தொடர்பாக எனக்கும் பிரேமாவதிக்கும் இடையே 2018-ல் வாடகை ஒப்பந்தம் கையெழுத்தானது. நான் முறையாக வாடகை செலுத்தி வந்தேன். பிரேமாவதி 2020-ல் இறந்தார்.
அதன் பிறகு எனக்கும் சுப்பிரமணியனுக்கும் இடையே வாடகை உயர்வு தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது.இந்நிலையில் சுப்பிரமணியன் கடந்த மாதம் அடி ஆட்களுடன் என் வீட்டிற்கு நுழைந்தார். நான் உடனடியாக அவசர போலீசாருக்கு தகவல் அளித்தேன். போலீசார் வந்ததால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன்.
காவல் ஆய்வாளர் என் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு என்னை மிரட்டினார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சுப்பிரமணியன் புகாரின் பேரில் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு வீட்டை காலி செய்ய மனுதாரர் தயாராக இருக்கும் போது, மனுதாரருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில் காவல் ஆய்வாளர் தலையிட்டது துரதிர்ஷ்டவசமானது. உரிமையில் பிரச்சினையில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிட்டுள்ளார். அவர் மீது மதுரை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications